ஹைடெக் சிட்டி என்று அழைக்கப்படும் ‘ஹைதராபாத் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இஞ்சினியரிங் கன்சல்டன்சி சிட்டி’ (தகவல் தொழில்நுட்பத்துறை சேவை நகரம்) ஒரு முக்கியமான நகர்ப்புற பகுதியாக ஹைதரபாத் நகரில் அமைந்துள்ளது.
இந்த நகர்ப்பகுதி மாதப்பூர் மற்றும் கச்சிபாவ்லி போன்ற புறநகர் பகுதிகளுக்கு அருகிலேயே உள்ளது. பெங்களூர் மாநகரம் இந்தியாவின் மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பத்துறை கேந்திரமாக மாறியபிறகு அப்போதைய ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் நகரத்தையும் ஒரு தகவல் தொழில்நுட்பவியல் கேந்திரமாக மாற்ற விரும்பினார்.
எனவே அவர் இந்த ஹைடெக் சிட்டி கேந்திரத்தில் பலவித கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மிகப்பெரிய தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கு வகை செய்துள்ளார்.
இந்த ஹைடெக் சிட்டியின் முதல் பணித்திட்டமாக சைபர் டவர்ஸ் எனும் வளாகம் உருவாக்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக சைவர் கேட்வே எனும் வளாகமும் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இன்று சைபர் சிட்டி அல்லது ஹைடெக் சிட்டி என்று அழைக்கபப்டும் இந்த சிறப்பு நகர்ப்பகுதியில் சத்யம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ, டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ், மைண்ட்ஸ்பேஸ் மற்றும் எல் அண்ட் டி, இன்ஃபோசிஸ், ஏ.பி.ஐ.ஐ.சி, ஐ.பி.எம், கூகுள் போன்ற உள்நாட்டு மற்றும் சர்வதேச பெருநிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை கொண்டுள்ளன.
இன்ஃபோசிஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளுக்காக நவீன வசதிகள் கொண்ட சொந்த வளாகங்களையும் இந்த ஹைடெக் சிட்டியில் அமைத்துள்ளன.



Click it and Unblock the Notifications