Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஹைதராபாத் பொட்டானிக்கல் கார்டன்ஸ்

ஹைதராபாத் பொட்டானிக்கல் கார்டன்ஸ், ஹைதராபாத்

153

ஹைதராபாத் பொட்டானிக்கல் கார்டன்ஸ் அல்லது கொட்லா விஜயபாஸ்கர ரெட்டி பொட்டானிக்கல் கார்டன் என்றழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா சுற்றுலா பயணிகள் மட்டுமல்லாமல் உள்ளூர் மக்களிடையேயும் பிரசித்தமாக அறியப்படுகிறது. ஹைதராபாத் நகரிலிருந்து 16 கி.மீ தூரத்திலேயே உள்ள இந்த தோட்டப்பூங்கா ஹைடெக் சிட்டிக்கு அருகில் அமைந்துள்ளது.

போக்குவரத்துக்கு வசதியாக ஹைதராபாத்மும்பை நெடுஞ்சாலையிலேயே இந்த தோட்டப்பூங்கா அமைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. சிறந்த விதைப்பண்ணையை உருவாக்கி பராமரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த தோட்டப்பூங்கா அதற்கான நவீன வசதிகளைக்கொண்டுள்ளது.

மேலும் இயற்கை மற்றும் தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் விதமாகவும் இந்த தோட்டப்பூங்காவின் செயல்பாடுகள் அமைந்துள்ளன. தற்சமயம் இந்த தோட்டப்பூங்காவின் ஐந்து பிரிவுகள் பார்வையாளர்களுக்காக திறந்துவிடப்பட்டுள்ளன.

இவற்றில் மூலிகைச்செடிகள், அழகுத்தாவரங்கள், நீர்த்தாவரங்கள், பலகை மரங்கள், மூங்கில்கள் மற்றும் பலவகை பழமரங்கள் போன்றவற்றை பயணிகள் காணலாம். நீங்கள் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராக இல்லாவிடினும் இந்த பசுமையான, பரந்த நிலைப்பரப்பில் அமைந்துள்ள தோட்டப்பூங்காவுக்கு விஜயம் செய்வது சிறந்தது. அழகிய சமவெளிப்பகுதிகளும், நீர்த்தேக்கங்களும் சிறு மலைப்பகுதிகளும் கண்களுக்கு விருந்தாய் அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
03 Apr,Fri
Check Out
04 Apr,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
03 Apr,Fri
Return On
04 Apr,Sat