ஹைதராபாத் நகரத்தில் ஒரு முக்கிய மார்க்கெட் பகுதியாக விளங்கும் இந்த கோட்டி இரண்டு பிரிவுகளை கொண்டுள்ளது. ஒன்று கிங் கோட்டி என்றும் மற்றது ராம் கோட்டி என்றும் அழைக்கப்படுகிறது.
கோட்டி எனும் பெயருக்கு மாளிகை வீடு என்பது பொருளாகும். வரலாற்றுக்காலத்தில் இப்பகுதியில் இருந்த மாளிகையில் நிஜாம் மன்னர்களின் பெண் துணைவியர்கள் வசித்திருந்தனர்.
பின்னர் ஆங்கிலேயர் ஆட்சியின்போது இம்மாளிகை ஜேம்ஸ் அகில்லீஸ் கிர்க்பாட்ரிக் என்பவரின் வசிப்பிடமாக பயன்படுத்தப்பட்டது. இன்று இம்மாளிகை ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாகவும், ஒரு பெண்கள் கல்லூரியாகவும் இயங்குகிறது.
புத்தகங்கள் வாங்க விரும்பினால் நீங்கள் தயங்காமல் செல்ல வேண்டிய இடம் இந்த கோட்டி மார்க்கெட் பகுதியாகும். அதுமட்டுமல்லாமல் இங்கு ஆடைகள், ஆபரணங்கள் மற்றும் வீட்டு உபயோகப்பொருட்களை விற்கும் அங்காடிகளும் அதிகமாக காணப்படுகின்றன.
இந்தப்பகுதியிலுள்ள குஜராத்தி காலி எனும் இடத்தில் மலிவான எலக்ட்ரானிக் பொருட்களை பயணிகள் வாங்கலாம். மேலும், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, ஆந்திரா பாங்க் போன்ற பிரபல வங்கிகளின் கிளைகள் இந்த மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ளன.
இந்தியாவின் மிகப்பழமையான மருத்துவக்கல்லூரியான ஓஸ்மானியா மருத்துவ கல்லூரி இந்த கோட்டி பகுதியில்தான் அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications