ஹைதராபாத் பெங்களூர் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த மீர் ஆலம் டேங்க் பிரபலமான நேரு ஜுவாலஜிகல் பூங்காவிற்கு வெகு அருகிலேயே உள்ளது. ஹுசேன் சாகர் மற்றும் ஹிமாயத் சாகர் போன்ற ஏரிகள் கட்டப்ப்படுவதற்கு முன்பாகவே இந்த ஏரி ஹைதராபாத் நகரின் குடிநீர்த்தேவையை பூர்த்தெ செய்யும் நீராதாரமாக திகழ்ந்துள்ளது.
இது 1804ம் ஆண்டு ஹைதராபாத் ராஜ்ஜியத்தின் பிரதானியாக விளங்கிய மீர் ஆலம் பஹதூர் என்பவரால் இது புனரமைக்கப்பட்டுள்ளது. ஆதியில் மீர் அக்பர் அலிகான் சிக்கந்தர் ஜா ஆசிஃப் ஜா எனும் மூன்றாவது நிஜாம் மன்னர் காலத்தில் இது வெட்டப்பட்டிருக்கிறது.
அக்காலத்தில் இந்த ஏரியை வெட்டுவதற்கு இரண்டு ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. இந்த ஏரிக்குப்பின் ஒரு வரலாற்றுக்கதையும் கூறப்படுகிறது. அதாவது மீர் ஆலம் நிஜாம் படைக்கு தலைமை வகித்து திப்பு சுல்தானை எதிர்த்து போரிட்டதாகவும், அந்த போரில் வென்று ஷீரங்கப்பட்டிணத்திலிருந்து எடுத்து வந்த செல்வத்தை வைத்தே இந்த ஏரியை புனரமைப்பு செய்ததாகவும் அந்த வரலாற்றுக்கதை கூறுகிறது.



Click it and Unblock the Notifications