மிருகவாணி நேஷனல் பார்க் எனப்படும் தேசியப்பூங்கா ஹைதரபாத் நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்திலுள்ள சில்கூர் எனும் இடத்தில் அமைந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் இந்த தேசியப்பூங்காவிற்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான இயற்கை ரசிகர்களுக்காக இந்த பூங்கா பலவகையான உயிரினங்கள் மற்றும் தாவரவகைகளை கொண்டுள்ளது.
ஏறக்குறைய 600 வகையான தாவர இனங்கள் இந்த வனப்பகுதியில் இருப்பதாக கூறப்படுகிறது. மூங்கில், பலஸ், சந்தனம், தேக்கு, பிக்குஸ் மற்றும் ரேலா போன்ற மரவகைகள் இங்கு வளர்ந்திருப்பதை பயணிகள் காணலாம்.
இந்திய முயல், சிறு மான், புனுகுப்பூனை, காட்டுப்பூனை, காட்டுப்பன்றி மற்றும் சாம்பார் மான் போன்றவை இங்கு வசிக்கும் விலங்குகளில் சில. ஊர்வன வகைகளில் சாரைப்பாம்பு இங்கு அதிகம் காணப்படுகிறது.
கட்டுவிரியன், நாகப்பாம்பு மற்றும் மலைப்பாம்பு போன்றவையும் இங்கு வசிக்கின்றன. இந்த பூங்காவிற்கு தினமும் எந்த நேரத்திலும் பார்வையாளர்கள் விஜயம் செய்யலாம். சாகச விரும்பிகள் இங்குள்ள காட்டேஜ்கள் மற்றும் கூடாரங்களில் தங்கி காட்டுயிர் அம்சங்களின் இரவு வாழ்க்கை குறித்த நேரடி அனுபவத்தை பெறலாம்.



Click it and Unblock the Notifications