ஹைதராபாத் நகரிலுள்ள இந்த என்.டி.ஆர் கார்டன்ஸ் ஒரு சிறிய அழகிய பூங்காவாகும். இந்த பூங்கா அமைந்திருக்கும் இடம் மற்றும் இதன் இயற்கை அழகு உள்ளூர் மக்களிடையே இந்த பூங்காவை பிரசித்தி பெற வைத்துள்ளது.
ஹுசேன் சாகர் ஏரிக்கு மிக அருகிலேயே அமைந்துள்ளதால் இங்கு வருகை தரும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகமாகவே காணப்படுகிறது. மாலை நேரங்களில் இந்த பூங்காவில் தங்கள் அன்புக்குரியவர்களோடு உல்லாசமாக கழிக்க ஏராளமானோர் வருகை தருவதால் குதூகலமும் பரவசமும் இந்த பூங்காவில் நிரம்பி வழிவதை பார்க்கலாம்.
பிரசித்தி பெற்ற நடிகரும் ஆந்திர மாநிலத்தின் குறிப்பிடத்தக்க அரசியல் தலைவருமான என்.டி. ராமாராவ் அவர்களை கௌரவிக்கும் விதமாக இந்த பூங்கா 1999ம் ஆண்டு கட்ட துவங்கப்பட்டு பல சர்ச்சைகளுக்கிடையே பல்வேறு கட்டங்களாக நடைபெற்ற கட்டுமானப்பணிகள் முடிந்தபின்னர் 2001ம் ஆண்டில் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது.



Click it and Unblock the Notifications