பைகா டோம்’ஸ் என்று அழைக்கப்படும் இந்த பைகா கல்லறைகள் பைகா அல்லது ஷும்ஸ் உல் உம்ராஹி என்று அழைக்கப்பட்ட ராஜவம்சத்தினரின் கல்லறைகள் அடங்கியுள்ள இடமாகும்.
மக்பாரா ஷும்ஸ் உல் உம்ரா என்றும் அழைக்கப்படும் இந்த கல்லறைகள் ஹைதராபாத் நகரின் புறநகர்ப்பகுதியான பிசால் பண்டா எனும் இடத்தில் உள்ளன. நவாப் டைக் ஜுங் பஹதூர் 1787ம் ஆண்டில் இந்த கல்லறை வளாகத்தை கட்ட ஆரம்பித்து அவருப்பின் அவரது மகனான முதலாம் ஆமிர் இ கபீர் என்பவரால் முடிக்கப்பட்டிருக்கிறது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் கொண்ட கல்லறை வளாகத்தில் பல தலைமுறைகளை சேர்ந்த பைகா வம்சத்தினர் புதைக்கப்பட்டிருக்கின்றனர். இந்த கல்லறை வளாகம் அற்புதமான கட்டிடக்கலை அம்சங்களை கொண்டு காட்சியளிப்பது இதன் விசேஷமாகும்.
வேறு எங்குமே காண முடியாத தனித்தன்மையுடன் இது அமைக்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது. இந்த கல்லறை வெகு நுணுக்கமான சுவர்ப்பூச்சு சித்திர வேலைப்பாடுகளைகொண்டுள்ளது மட்டுமல்லாமல், கிரேக்க, பெர்ஷிய, முகலாய, ராஜஸ்தானிய, ஆசஃப் ஜாஹி வம்சத்திய மற்றும் தக்காண பாணி போன்ற கதம்பமான கலையம்சங்களை உள்ளடக்கியதாக காட்சியளிப்பது ஒரு குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.
இரானிய தேசத்து அரண்மனை மினார்கள் போன்று இங்கு தொகுப்புகளாக காட்சியளிக்கும் குமிழ் கோபுரங்கள் பயணிகளை பிரமிக்க வைக்கின்றன. ஹைதராபாத் நகரிலுள்ள முக்கியமான வரலாற்று சின்னங்களில் ஒன்றான இந்த பைகா கல்லறை வளாகத்துக்கு மறக்காமல் விஜயம் செய்வது நல்லது.



Click it and Unblock the Notifications