சுதந்திரத்திற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் ஹைதராபாத் நிஜாம் ராஜ வம்சத்தினரின் இருப்பிடமாக திகழ்ந்த பழைய மாளிகையே புராணி ஹவேலி என்றழைக்கப்படுகிறது.
அதற்கும் முந்தைய காலத்தில் ஹவேலி காதீம் என்று அழைக்கப்பட்டு வந்த இந்த அரண்மனை வளாகம் ‘இரண்டாம் ஆசஃப் ஜா - அலிகான் பகதூர்’ என்ற நிஜாம் மன்னரால் கட்டப்பட்டதாகும்.
அவர் இதனை தனது மகனான ‘முன்றாம் ஆசஃப் ஜா- சிகந்தர் ஜா’வுக்கு உரிமையளித்துள்ளார். இவர் ஹைதராபாத் நகரத்தை 1803ம் ஆண்டிலிருந்து 1829ம் ஆண்டு வரை ஆட்சி செய்தவராவார்.
ஆங்கில எழுத்தான U வடிவத்தில் இந்த அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கொன்று இணையாக இரண்டு தொகுதிகள் இந்த அமைப்பில் இடம் பெற்றிருக்கின்றன. ராஜகுடும்பத்தினரின் வசிப்பிடம் இந்த இரண்டு தொகுதிகளுக்கு குறுக்காக மையப்பகுதியில் இடம்பெற்றிருக்கிறது.
இந்த ஹவேலி பாணி மாளிகை 18ம் நூற்றாண்டைச்சேர்ந்த ஐரோப்பிய அரண்மனைகளை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையில் உலகிலேயே மிக நீளமான ‘வார்ட்ரோப்’ (உடை அலமாரிகள்) இடம் பெற்றிருப்பது இதன் மற்றொரு சிறப்பம்சமாக சொல்லப்படுகிறது.
மேலும், இதை பயன்படுத்த ஒரு பிரத்யேக ‘எலிவேட்டர்’ (லிஃப்ட் - மின் தூக்கி) அமைக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications