Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » ராமகிருஷ்ண மடம்

ராமகிருஷ்ண மடம், ஹைதராபாத்

153

ஹைதராபாத் ராமகிருஷ்ண மடம் தோமல்குடா பகுதியில் லோயர் டாங்க் பண்ட் ரோடில் அமைந்துள்ளது. 1974ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த மடத்துக்கு ஏராளமான பக்தர்களும் ஆன்மீக ஆர்வலர்களும் வருகை தருகின்றனர்.

பூஜிப்பதற்கு உரிய இடமாக மட்டுமல்லாமல் கல்விக்கேந்திரமாகவும் இந்த ராமகிருஷ்ண மடம் இயங்குவது குறிப்பிடத்தக்கது. விவேகானந்த இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹ்யூமன் எக்செலன்ஸ், விவேகானந்தா லைப்ரரி, கீதா தர்ஷன், விவேகானந்தா யுனிவர்சல் டெம்பிள் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை.

ராமகிருஷ்ண மடத்தின் சேவகர்கள் பலவிதங்களில் சமூக சேவையாற்றுகின்றனர். ஏழைகளுக்கு உணவளித்தல், குழந்தைகளுக்கு கல்வி புகட்டல், இலவச கல்விப்புத்தகங்கள் வழங்குதல், பள்ளிக்குழந்தைகளுக்கு காலை உணவளித்தல் போன்ற யாவும் அவற்றில் அடங்கும்.

பிரதான நோக்கங்களாக ஸ்வாமி விவேகானந்தரால் வரையறுக்கப்பட்ட ‘ அன்னதானம், வித்யாதானம், ஞானதானம்’ ஆகிய மூன்று அம்சங்களை நிறைவேற்றுவதில் ராமகிருஷ்ண மடம் ஈடுபட்டுள்ளது.

ஏழைகளுக்கு இலவச கல்வியை மட்டுமல்லாமல் அவர்களுக்கு ஆன்மீகரீதியான கல்வி மற்றும் ஞானத்தையும் இந்த மடம் வழங்கிவருகிறது. ஜாதி மத பேதமில்லாமல் எவரும் இந்த ராமகிருஷ்ண மடத்தின் தொண்டராக மாறி சமூகச்சேவையில் ஈடுபடலாம். மடத்தின் பல்வேறு சேவை செயல்பாடுகளில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
01 Apr,Wed
Check Out
02 Apr,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
01 Apr,Wed
Return On
02 Apr,Thu