Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » சலார் ஜங் மியூசியம்

சலார் ஜங் மியூசியம், ஹைதராபாத்

153

ஹைதராபாத் நகரின் செழுமையான வரலாற்றுப்பின்னணியை பல அற்புத சேகரிப்புகளின் மூலம் காட்சிப்படுத்தும் ஒரு முக்கியமான அருங்காட்சியகம் இந்த சலார் ஜங் மியூசியம் ஆகும்.

இந்தியாவிலுள்ள மூன்று தேசிய அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்க விசேஷமாகும். பெர்ஷியா, ஐரோப்பா, வட அமெரிக்கா, சைனா, நேபாள், பர்மா, எகிப்து மற்றும் புராதன கால இந்தியாவின் பல்வேறு பிரதேசங்கள் போன்றவற்றிலிருந்து சேகரிக்கப்பட்ட அரும்பொருட்களை இந்த அருங்காட்சியகம் கொண்டுள்ளது.

அற்புதமான தரைவிரிப்புகள், மரச்சாமான்கள், சிலைகள், ஓவியங்கள், ஏட்டுப்பிரதிகள், பீங்கான்பொருட்கள், நெசவுப்பொருட்கள், கடிகாரங்கள் மற்றும் உலோக கலைப்பொருட்கள் போன்றவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இங்குள்ள பொருட்களில் பெரும்பான்மையானவை சலார் ஜங் குடும்பத்தாரின் பரம்பரைச் சொத்துக்களாக வழிவழியாக காக்கப்பட்டு வந்தவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சேகரிப்புகளில் கி.பி 1 ம் நூற்றண்டைச்சேர்ந்த சில அரிய பொருட்களும் இடம்பெற்றிருப்பது மிக விசேஷமான அம்சமாகும்.

மூன்றாம் சலார் ஜங் வம்ச நவாப்பாகிய மீர் யூசுஃப் அலி கான் என்பவர் இத்தகைய பொருட்களை சேகரிப்பதற்காக சுமார் 35 வருடங்களுக்கு தன் செல்வத்தில் பெரும் பகுதியை செலவிட்டுள்ளார். இருந்தும் அவர் சேகரித்தவற்றில் ஏறைக்குறைய பாதிப்பொருட்களை காப்பாளர்கள் அபகரித்துவிட்டதாகவும் ஒரு வருத்தத்திற்குரிய தகவல் சொல்லப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu