ஹைதரபாத் நகரத்தின் புறநகர்ப்பகுதிகளில் ஒன்றான இந்த ஷமீர்பேட் செகந்தராபாத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் உள்ளது. இங்கு பல பிரபலமான கல்வி மையங்கள் அமைந்துள்ளன.
பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அன்ட் சைன்ஸ், பிலானி – ஹைதரபாத், நல்சார் சட்டப்பல்கலைக்கழகம் மற்றும் ஜினோம் வேலி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
பிரசித்தமான ஷமீர்பேட் ஏரியும் இப்பகுதியில் அமைந்துள்ளது. செயற்கை ஏரியான இது நிஜாம் மன்னர்கள் காலத்தில் வெட்டப்பட்டுள்ளது. உள்ளூர் மக்கள் விரும்பி விஜயம் செய்யும் முக்கியமான ஓய்வுஸ்தலமாக இந்த ஏரிப்பகுதி விளங்குகிறது.
மாலை நேரத்தில் குடும்பங்கள் மற்றும் மாணவர் குழுக்கள் இந்த ஏரிப்பகுதிக்கு பிக்னிக் சிற்றுலா மேற்கொண்டிருப்பதை பயணிகள் காண முடியும். பலவிதமான ரெஸ்டாரெண்டுகள் மற்றும் ஹோட்டல்கள் இந்த ஏரிப்பகுதியில் அமைந்துள்ளதால் பொழுதுபோக்கிற்கு மிகவும் ஏற்ற இடமாக பெயர் பெற்றுள்ளது.
ஒரு கிளப் மற்றும் சொகுசு ரிசார்ட் விடுதி ஆகியவையும் இந்த ஏரியை ஒட்டி அமைந்துள்ளன. ஷமீர்பேட் பகுதியில் ஒரு மான்கள் பூங்காவும் இடம் பெற்றுள்ளது. மான்கள் மட்டுமல்லாமல் பலவிதமான பறவைகள் மற்றும் மயில் போன்றவற்றையும் இந்த பூங்காவில் பார்த்து ரசிக்கலாம்.
ஷமீர்பேட் ஏரிக்கு அருகிலேயே இந்த மான்கள் பூங்கா அமைந்துள்ளது. பல தெலுங்கு படங்களின் படப்பிடிப்புகள் ஷமீர்பேட் ஏரிக்கரையில் நடத்தப்பட்டுள்ளன என்பது ஒரு கூடுதல் தகவல்.



Click it and Unblock the Notifications