Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » ஸ்னோ வேர்ல்டு

ஸ்னோ வேர்ல்டு, ஹைதராபாத்

153

ஹைதராபாத் நகரத்தில் உள்ள இந்த ஸ்னோ வேர்ல்டு நாட்டிலேயே முதல் உல்லாச பொழுதுபோக்கு வளாகமாக அறியப்படுகிறது. 2004ம் ஆண்டின் முற்பகுதியில் இது திறக்கப்பட்டது.

ஒரு நாளில் சுமார் 2400 பயணிகள் விஜயம் செய்யும்படியான வசதியை இது கொண்டுள்ளது. பெயருக்கேற்றபடி செயற்கை பனி வளாகத்தை கொண்டுள்ள இந்த பொழுதுபோக்கு மையத்தில் பனிக்குளிரை அனுபவித்து மகிழலாம்.

டன் கணக்கில் செயற்கை பனித்துகள் நிறைந்துள்ளதால் குழந்தைகளும் பெரியவர்களும் பனிக்கட்டி பொம்மைகள் உருவாக்கியும் பனியில் விளையாடியும் மகிழலாம். நான்கு முறை வடிகட்டப்பட்ட நீரைக்கொண்டு இந்த பனித்துகள்கள் உருவாக்கப்படுவதால் சிறு குழந்தைகளின் ஆரோக்கிய பாதுகாப்பு குறித்த அச்சம் வேண்டியதில்லை.

இந்த பனிப்பொழுதுபோக்கு மையத்தில் நுழைவதற்கு முன்னர் கடும் குளிரிலிருந்து உங்களை பாதுகாத்துக்கொள்வதற்காக கனமான கம்பளி உடைகளை அணிந்து கொண்டு செல்வது அவசியமாகும்.

இந்த வளாகத்தில் நுழைந்தவுடனேயே உடலை சூடேற்றிக்கொள்வதற்காக சூடான சூப் பயணிகளுக்கு வழங்கப்படுகிறது. ஸ்னோ ட்யூப் ஸ்லைட், ஐஸ் பம்பிங் கார்ஸ், ஐஸ் ஸ்கேட்டிங் ரிங், ஸ்னோ வார் ஸோன் மற்றும் ஸ்லே ஸ்லைட் போன்ற விளையாட்டு அம்சங்கள் இந்த ஸ்னோ வேர்ல்டு பொழுது போக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
08 Sep,Tue
Check Out
09 Sep,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
08 Sep,Tue
Return On
09 Sep,Wed