கோல்கண்டா பகுதியின் ஏழாவது சுல்தானாக ஆட்சி செய்த அப்துல்லா குதுப் ஷா என்பவர் இந்த தாராமதி பரதாரி எனப்படும் சராய் (ஓய்வுச்சத்திரம்) நினைவுச்சின்னத்தை ஏற்படுத்தியுள்ளார்.
இப்ராஹிம் குலி குதுப் ஷா என்பவரால் நிர்மாணிக்கப்பட்ட இப்ராஹிம் பாக் எனப்படும் தோட்டப்பூங்கா வளாகத்திலேயே இந்த தாராமதி பரதாரி கட்டமைப்பு அமைந்துள்ளது. மூஸி ஆற்றின் கரையில் உள்ள இந்த சத்திரம் யாத்ரீகர்கள் தங்கி ஓய்வெடுப்பதற்காக கட்டப்பட்டுள்ளது.
தாராமதி எனும் அரண்மனை நாட்டிய பெண்மணியை கௌரவிக்கும் விதமாக இந்த சத்திரத்தை சுல்தான் கட்டியதாக கூறப்படுகிறது. இந்த தாராமதி மற்றும் அவரது சகோதரி பிரேமமதி இருவருமே இசை மற்றும் நடனக்கலைகளில் தேர்ச்சி பெற்று விளங்கியதாக சொல்லப்படுகிறது.
அப்துல்லா குதுப் ஷாவின் அவையில் இவர்கள் தங்கள் அரங்கேற்றங்களை நிகழ்த்தியுள்ளனர். அவர்களது கலைத்திறமையால் பெரிதும் கவரப்பட்ட இந்த சுல்தான் மூத்த சகோதரியின் பெயரில் இந்த சத்திரத்தை நிர்மாணித்தார்.
அதுமட்டுமல்லாமல் குதுப் ஷாஹி வம்சத்தினரின் ராஜ சமாதி தோட்டத்திலேயே இந்த சகோதரிகள் இருவரும் புதைக்கப்பட்டது ஒரு ஆச்சரியமான வரலாற்றுத்தகவலாகும்.



Click it and Unblock the Notifications