Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஹைதராபாத் » ஈர்க்கும் இடங்கள் » நிஜாம் மியூசியம்

நிஜாம் மியூசியம், ஹைதராபாத்

153

ஹைதராபாத் நகருக்கு விஜயம் செய்யும் ஒவ்வொரு பயணியும் கண்டிப்பாக விஜயம் செய்ய வேண்டிய இடங்களில் இந்த நிஜாம் மியூசியமும் ஒன்றாகும். நிஜாம் மன்னர்களின் அரண்மனைப்பகுதியின் ஒரு அங்கமாக உள்ள இந்த மியூசியத்தில் ஏராளமான ஓவியங்கள், ஆபரணங்கள், அரிய பரிசுப்பொருட்கள், ஆயுதங்கள் மற்றும் பழமையான கார்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலும் நிஜாம் மன்னர்களுக்கு பரிசாக கிடைத்த ஏராளமான பொருட்கள் மற்றும் அவர்கள் தங்கள் வாழ்நாளில் கலாரசனையோடு சேகரித்த அரும்பொருட்கள் ஆகியவை இங்குள்ள சேகரிப்பில் இடம் பெற்றுள்ளன.

வெள்ளியில் உருவாக்கப்பட்ட ஹைதராபாத் நகர சின்னங்களின் மாதிரி வடிவமைப்புகளையும் இங்கு பார்வையாளர்கள் காணலாம். மரத்தாலும் தங்கத்தாலும் செய்யப்பட்ட சிம்மாசனம், வாசனைத்திரவியங்கள் வைப்பதற்கான வெள்ளிக்குப்பிகள், ரத்தினங்கள் பொதிக்கப்பட்ட வெள்ளி காபி குவளைகள், முத்துச்சிப்பி பதிக்கப்பட்ட ஒரு எழுத்துப்பேழை போன்றவை இங்குள்ள பொருட்களில் சில.

பிரேதப்பெட்டிகள், வைரங்கள் பதித்த தங்க உணவுப்பெட்டி, வெள்ளிசரிகை வேலைப்பாடு கொண்ட யானையும் பாகனும் கொண்ட பொம்மை போன்றவையும் இங்கு பயணிகளை கவரும் அம்சங்களாக காட்சிக்கு உள்ளன.

அதுமட்டுமல்லாமல் நிஜாம் ராஜ வம்சத்தினரின் நவீன அந்தஸ்து அடையாளங்களான ரோல்ஸ்ராய்ஸ் கார் மற்றும் ஜாகுவார் கார் போன்றவையும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இவை வின்டேஜ் கார் பிரியர்களை வெகுவாக கவர்கின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed