Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» ஜம்ஷெட்பூர்

ஜம்ஷெட்பூர் - இந்தியாவின் தொழில்நகரம்!

17

இந்தியாவின் தொழில் நகரம் என்றழைக்கப்படும் இந்நகரம் ஜம்ஷெட்ஜீ நுசர்வாஞ்சி டாட்டாவால் உருவாக்கப்பட்டது. ஜார்கண்டின் அதிக மக்கள் தொகை உள்ள நகரமான இது, டாட்டா நகரம் என்றும் எஃகு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

கிழக்கு சிங்க்பமின் தலைமைச் செயலகமான இது கிழக்கு மாகாணங்களில் கொல்கட்டா, பாட்னாவிற்கு அடுத்த பெரிய நகரமாகும். ஆதித்யாபூருக்கு அடுத்து மிகப்பெரிய தொழிற்நகரமான இங்கு 1000சிறிய மற்றும் பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.  

ஜாம்ஷெத்பூர் சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாப்பயணிகள் ஈர்க்கத் துவங்கியுள்ள இந்நகரம் மலை மற்றும் வனப்பகுதிகளுக்கு அருகில் இருப்பதால் சுற்றுலாத்துறையிலும் முன்னேறி வருகிறது.

டாடா ஸ்டீல் கம்பனியின் 50ஆண்டு நிறைவின் நினைவாக கட்டப்பட்ட ஜூபிலி பூங்காவில் மார்ச் 3ஆம் தேதி உருவாக்கியவர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்று விளக்குகளால் அலங்கரிக்கப்படும் இந்த பூங்கா புகழ்பெற்று விளங்குகிறது.

டிம்னா ஏரி என்ற செயற்கை நீர்த்தொட்டி நகரின் முக்கியமான நீராதாரங்களில் ஒன்றாகும். ஜெட்சறுக்கு, படகு சவாரி மற்றும் நீர் மோட்டார் சவாரி ஆகியவை இங்கு உள்ளன.  

மேலும் டாடா ஸ்டீல் வனவிலங்கு பூங்கா, சண்டில் அணை, மீட் நதி, ஹட்கோ ஏரி, புவனேஷ்வரி கோவில், மூல்கோகர் பூங்கா ஆகியவை இங்கு உள்ளன. கட்சிலா என்றழைக்கப்படும் இயற்கை அழகு வாய்ந்த இடமும் இங்கிருந்து 40கிமீ தொலைவில் உள்ளது.

ஜம்ஷெட்பூர் வரலாறு!

சாக்‌ஷி என்றழைக்கப்பட்ட ஜம்ஷெத்பூர் 1918ல் ஜம்ஷெத்பூர் என பெயர்மாற்றம் செய்யப்பட்டது. டாடா பிட்டர்ஸ்பர்க் சென்று தனது கனவு எஃகு தொழிற்சாலையை அமைக்க இடம் பார்த்து தருமாறு வேண்டினார். பின்னர் மூன்று ஆண்டுகள் நடந்த தேடுதல் பணிக்குப் பின் இயற்கை வளங்கள் வாய்ந்த இந்த தேர்ந்தெடுக்கப்பட்டது.  

புவியியல் அமைப்பு!

ஜார்கண்டின் தென் எல்லையில் உள்ள இந்த ஊர் ஒரிசா மற்றும் வங்காளத்தை எல்லைகளாகக் கொண்டுள்ளது. கார்கை மற்றும் சுபர்னரேகா நதிகள் சேருமிடத்தில் இந்நகர் அமைந்துள்ளதால் குடிநீர் மற்றும் நிலத்தடிநீர் தேவைகளுக்கு இந்த நீரே பயன்படுத்தப்படுகிறது. மலை சார்ந்த இடத்தில் தால்மா மலைகள் சூழ அமைந்துள்ள இந்நகரத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் உள்ளன.

பயணிக்க சிறந்த பருவம்

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலத்தில் வானிலை மிதமாக உள்ளதால் பயணிக்க சிறந்த பருவமாக கருதப்படுகிறது.  

ஜாம்ஷெத்பூர் பயணிக்கும் வழிகள்

ரயில் மற்றும் சாலை வசதிகள் சிறப்பாக உள்ளதால் பல ஊர்களுடன் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து உள்ளது.

ஜம்ஷெட்பூர் சிறப்பு

ஜம்ஷெட்பூர் வானிலை

சிறந்த காலநிலை ஜம்ஷெட்பூர்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது ஜம்ஷெட்பூர்

  • சாலை வழியாக
    தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் மூலம் பல ஊர்களுடன் இந்நகரம் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை 33ன் வழியாக மும்பை மற்றும் டெல்லியும், தேசிய நெடுஞ்சாலை 6ன் வழியாக கரக்பூர், கொல்கட்டா ஆகிய ஊர்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூர் பேருந்துகள், ஆட்டோ, ரிக்‌ஷா மூலம் பயண வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    டாடாநகர் ரயில்நிலையம் மாநிலத்தின் முக்கியமான ரயில்நிலையமாகும். கோல்கட்டா, மும்பை, டெல்லி, அஹ்மதாபாத், பெங்களூர், நாக்பூர், புவனேஷ்வர், புனே ஆகிய ஊர்களுக்கு ரயில்சேவைகள் உள்ளன. ஆதித்யாபூர், கம்ஹரியா, கந்த்ரா, கோவிந்பூர், சல்கஜாரி ஆகியவையும் முக்கியமான ரயில்நிலையங்களாகக் கருதப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சோனாரி விமானநிலையம் டாடா குழுமத்தின் விமானங்களை கொண்டுவர பயன்படுகிறது. வணிக விமான தளங்கள் கோல்கட்டா மற்றும் ராஞ்சியில் 289 கிமீ மற்றும் 130 கிமீ தொலைவில் உள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Sep,Fri
Return On
19 Sep,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Sep,Fri
Check Out
19 Sep,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Sep,Fri
Return On
19 Sep,Sat