Search
  • Follow NativePlanet
Share

கல்பெட்டா - இயற்கையோடு உரையாடுங்கள்!

26

கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பிராமண்டமும், பேரழகும் வாய்ந்த மலைகள் சூழ, காப்பித் தோட்டங்களிலிருந்து காற்றில் மிதந்து வரும் நறுமணம் எங்கும் நிறைந்திருக்க மனதை மயக்கும் சுற்றுலாத் தலமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது கல்பெட்டா நகரம். இந்த நகரத்தில் ஏராளமான ஆலயங்கள் அமைந்திருப்பதால் கல்பெட்டா ஹிந்துக்களின் பிரசித்திபெற்ற யாத்ரீக ஸ்தலமாகவும் அறியப்படுகிறது.

கல்பெட்டாவின் புகழ்பெற்ற ஹிந்துக் கோயில்களான ஸ்ரீ மகாவிஷ்ணு கோயில், ஐயப்ப சுவாமி கோயில், கிரம்மாம் தேவி கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் பக்தர்கள் கூட்டத்தை அதிகமாக பார்க்கலாம்.

அதோடு கல்பெட்டாவில் புலியார்மலா ஜெயின் கோயில் உள்ளிட்ட ஜைன கோயில்கள் சிலவும் இருக்கின்றன. இவைதவிர 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரம்பெட்டா மசூதி கல்பெட்டா நகரின் முக்கிய இஸ்லாமிய வழிபாட்டுத் தலமாகும்.

கல்பெட்டா நகரில் உள்ள கோயில்களை தவிர நீங்கள் மீன்முட்டி, சூச்சிப்பாறை, கந்தன்பாறை போன்ற அருவிகளுக்கும் சென்று உல்லாசமாக பொழுதை கழிக்கலாம். மேலும் ஆண்டு முழுவதும் இதமான வெப்பநிலையையே கொண்டிருக்கும் கல்பெட்டா நகரை அதன் பனிக் காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் சிறப்பானது.

கல்பெட்டா சிறப்பு

கல்பெட்டா வானிலை

சிறந்த காலநிலை கல்பெட்டா

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கல்பெட்டா

  • சாலை வழியாக
    கல்பெட்டா நகரம் கோழிக்கோடு-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்திருக்கிறது. எனவே அருகாமை நகரமான கோழிக்கோடிலிருந்து சாலை வழியாக வெகு சுலபமாக கல்பெட்டா நகரை அடையலாம். அதோடு பெங்களூர், மைசூர், மங்களூர் போன்ற நகரங்களிலிருந்து தினமும் எண்ணற்ற சாதாரண மற்றும் குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகள் கல்பெட்டா நகருக்கு இயக்கப்படுகின்றன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    கல்பெட்டா நகரிலிருந்து 73 கிலோமீட்டர் தொலைவில் கோழிக்கோடு ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையத்திலிருந்து பயணிகள் பேருந்து அல்லது வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி கல்பெட்டா நகரை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கல்பெட்டா நகரிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில் கோழிக்கோடு விமான நிலையம் அமைந்திருக்கிறது. இந்த விமான நிலையத்திலிருந்து நாட்டின் முக்கிய நகரங்களுக்கு தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக கல்பெட்டா நகரை அடைந்து விட முடியும்.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Jul,Fri
Check Out
11 Jul,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Jul,Fri
Return On
11 Jul,Sat