Search
  • Follow NativePlanet
Share

கொடசத்ரி – கடின நெஞ்சம் படைத்தவர்களுக்கு

18

கடல் மட்டத்திலிருந்து 1343 மீட்டர் உயரத்தில் உள்ள கொடசத்ரி மலைப்பிரதேசம் இந்தியாவின் புகழ் பெற்ற கோயில்களில் ஒன்றான கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலைக் கொண்டுள்ளது. அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள கொடசத்ரி மலைச்சிகரத்தை உள்ளடக்கிய இந்த ஸ்தலம் கர்நாடக மாநிலத்தின் ஷிமோகா மாவட்டத்தில் மூகாம்பிகா தேசிய வனப்பகுதியில் அமைந்துள்ளது. பெங்களூர் நகரத்திலிருந்து 400 கி.மீ தூரத்தில் இது உள்ளது.

 

காட்டு நடைப்பாதைகள் மற்றும் இதர இயற்கை அம்சங்கள்

தொடர்ந்து வீசும் வலிமையான காற்றின் காரணமாக தாவரங்கள் ஏதுமற்ற மலையுச்சியில் இந்த மூகாம்பிகை அம்மன் கோயில் அமைந்துள்ளது. சூழ்ந்துள்ள காடுகளில் பல அரிய வகை தாவரங்கள் மற்றும் பல்வேறு உயிரினங்கள் நிறைந்துள்ளன.

மேலும் இந்த காட்டினுள் ஒரு அற்புதமான மலையேற்றப் பாதையும் அமைந்துள்ளது. கொஞ்சம் சிரமம் என்றாலும் இந்தப்பாதையில் மலையேற்றம் பழகாத பயணிகளும் ஏறலாம். வசீகரமான இயற்கை எழிலைக்கொண்டுள்ள கொடசத்ரி வனப்பகுதியில் மலபார் கருங்குரங்கு, ராஜ நாகம், கழுதைப்புலி, காட்டெருமை மற்றும் மலைப்பாம்புகள் போன்றவை வசிக்கின்றன.

சர்வஜனபீடம் என்று பிரசித்தமாக அழைக்கப்படும் இந்த கொடசத்ரி புகழ் பெற்ற இந்து குருவான சங்கராச்சாரியார் தியானத்தில் ஈடுபட்ட ஸ்தலம் என்பதால் பிரசித்தமாக அறியப்படுகிறது.

கொடசத்ரிக்கு விஜயம் செய்ய அக்டோபரிலிருந்து மார்ச் வரையிலான காலம் உகந்ததாகும். கடினமான இந்த மலைப்பாதைகளில் ஜீப்புகளின் மூலமே பயணிக்க முடியும். கொல்லூரிலிருந்து ஜீப்புகள் வாடகைக்கு கிடைக்கின்றன. அடர்ந்த கொடசத்ரி காடுகளில் அட்டைகளின் தொல்லை அதிகம் என்பது பயணிகள் கவனமுடன் இருப்பது அவசியம்.

கொடசத்ரி சிறப்பு

கொடசத்ரி வானிலை

சிறந்த காலநிலை கொடசத்ரி

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது கொடசத்ரி

  • சாலை வழியாக
    கொடசத்ரியை சாலை மார்க்கமாக அடைய பயணிகள் முதலில் நாகோடி எனும் கிராமத்திற்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கிருந்து மலையேற்றப்பாதையில் பயணிக்கலாம். இந்த கிராமத்திற்கு நேரடி பஸ் வசதிகள் இல்லை. ஷிமோகா அல்லது உடுப்பி நகரத்திலிருந்து சுற்றுலாப்பயணிகள் வாடகை ஜீப், வேன், டாக்சி அல்லது பைக்குகள் (ஆம்! வாடகை பைக்குகள்தான்) மூலம் இந்த கிராமத்தை அடையலாம்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    குண்டபுரா ரயில்நிலையம் கொடசத்ரிக்கு அருகிலுள்ள ரயில் நிலையமாகும். இது 77 கி.மீ தொலைவில் உள்ளது. அருகாமையில் உள்ள பல முக்கிய நகரங்களுக்கும் சிறு நகரங்களுக்கு இங்கிருந்து ரயில் வசதிகள் உள்ளன.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    கொடசத்ரிக்கு அருகிலுள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையமாக மங்களூர் விமான நிலையம் அமைந்துள்ளது. முன்னர் பாஜ்பே என்று அழைக்கப்பட்ட இந்த விமான நிலையம் கொடசத்ரியிலிருந்து 164 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. மங்களூர் விமான நிலையம் மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்திய நகரங்கள் வரை விமான சேவைகளை பெற்றுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu