நாட்டகம், கோட்டயம்

கோட்டயம் மாவட்டத்தில் பல்லோம் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம் இந்த நாட்டகம் ஆகும். கோட்டயத்திலிருந்து 6.5 கி.மீ தூரத்தில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

பசுமையான இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் வீற்றிருப்பதால் தன் இயற்கை அழகுக்காகவே நாட்டகம் கிராமம் பிரசித்தமாக அறியப்படுகிறது. ஏராளமான புகலிடப்பறவைகள் இங்கு கோடைக்காலத்தில் விஜயம் செய்வது மற்றொரு விசேஷமாகும்.

பறவைகளின் இசைக்கீச்சொலிகள் இக்கிராமப்பகுதியை ஒரு இயற்கைச் சொர்க்கமாகவே மாற்றிவிடுகின்றன. மேலும், ‘கோட்டயம் போர்ட் அண்ட் மற்றும் கன்டெய்னர் டெர்மினல் (KPCT) எனப்படும் கேந்திரமும் இக்கிராமப்பகுதியில் உள்ளது.

ஆயுர்வேத மசாஜ் சேவை மையங்களும் இக்கிராமத்தில் உள்ளதால் பயணிகள் உடலையும் மனதையும் புத்துணர்ச்சியூட்டிக் கொள்ளவும் வாய்ப்புள்ளது. இவை மட்டுமல்லாமல், நீச்சல், மீன்பிடித்தல் மற்றும் படகுச்சவாரி போன்ற பொழுதுபோக்கு அம்சங்களும் இந்த கிராமத்தில் நிறைந்துள்ளன.

சமீப காலமாக இந்த சிறு கிராமம் பரபரப்பான சுற்றுலாஸ்தலமாக மாறிவருவதும் குறிப்பிடத்தக்கது. புகைப்பட ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும் வகையில் இயற்கை காட்சிகள் நிரம்பி வழிவது இக்கிராமத்தின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

Please Wait while comments are loading...