பூஞ்ஜார் அரண்மனை, கோட்டயம்

கோட்டயத்திலிருந்து பலா-ஈராட்டுப்பட்டா செல்லும் வழியில் பூஞ்ஜார் எனும் இடத்தில் இந்த பூஞ்ஜார் அரண்மனை அமைந்துள்ளது. பலவித ராஜவம்ச நினைவுப்பொருட்கள், அழகிய சிலைகள் மற்றும் பாறைகளில் வடிக்கப்பட்ட விளக்குகள் போன்றவற்றை இந்த அரண்மனையில் காணலாம்.

இங்கு அழகான இருக்கைகள் மற்றும் துரோனி எனப்படும் ‘சிகிச்சை படுக்கை’ மற்றும் ஒரு பல்லக்கு போன்றவற்றையும் பார்க்கலாம். விசேஷமான துரோனி படுக்கை அமைப்பு ஒரே மரத்துண்டில் வடிவமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர கலையம்சம் பொருந்திய சரவிளக்குகள், ஆபரணப்பெட்டிகள், தானிய அளவை மரக்கால்கள் மற்றும் பனையோலை எழுத்துப்பிரட்திகள் போன்றவற்றையும் இந்த அரண்மனையில் பார்க்கலாம்.

கலையம்சத்துடன் வடிக்கப்பட்டிருக்கும் நடராஜர் சிலை மற்றும் சில பழமையான போர்க்கருவிகளும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. சடங்குகளின்போது பயன்படுத்தப்படும் ஒரு அபூர்வமான சங்கு அவசியம் பார்க்க வேண்டிய ஒரு அம்சமாகும்.

பூஞ்ஜார் அரண்மனைக்கு அருகிலேயே மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சிறு நகல் வடிவம் ஒன்றும் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் அதிசய காட்சியை காணலாம். இந்த கோயிலின் சுவர்களில் புராணக்கதைகளை சித்தரிக்கும் சிற்பவடிப்புகள் காட்சியளிக்கின்றன. பாறைகளில் வடிக்கப்பட்டிருக்கும் சுட்டுவிளக்கு எனப்படும் விளக்கு அமைப்பு இந்த கோயிலின் சிறப்பம்சமாகும்.

Please Wait while comments are loading...