பனச்சிகாடு, கோட்டயம்

பனச்சிகாடு எனும் சாந்தம் வழியும் அழகிய கிராமம் கோட்டயம் மாவட்டத்திலுள்ள மற்றொரு முக்கியமான சுற்றுலா அம்சமாகும். இது கோட்டயத்திற்கும் சங்கணாச்சேரிக்கும் இடையே உள்ள பிரதான சாலையிலேயே அமைந்துள்ளது.

கோட்டயத்திலிருந்து 11 கி.மீ தூரத்திலுள்ள பனச்சிகாடு கிராமம் இங்குள்ள சரஸ்வதி கோயிலுக்கு புகழ் பெற்றுள்ளது. தக்ஷிண மூகாம்பிகை கோயில் என்றும் இது அழைக்கப்படுகிறது.

வருடமுழுவதுமே இக்கோயிலில் பூஜைகள் நடத்தப்படுவது இதன் சிறப்பம்சமாகும். அதுமட்டுமல்லாமல் இக்கிராமத்தை சுற்றிலும் ரம்மியமான இயற்கைக்காட்சிகள் நிறைந்திருப்பதால் ஒரு சுற்றுலாத்தலமாகவும் இது பிரசித்தி பெற்றுவிட்டது.

இயற்கையின் மடியில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள விரும்பும் ரசிகர்கள் இந்த கிராமத்தை தேடி விஜயம் செய்கின்றனர். அவர்களை ஏமாற்றாமல் உணர்வுகளை லேசாக்கி ஊர் திரும்ப வைக்கும் சௌந்தர்யத்தை இந்த எளிமையான கிராமம் தன்னுள் கொண்டுள்ளது. புகைப்பட ஆர்வலருக்கு பிடிக்கும்படியான காட்சிகளும் பனச்சிகாடு கிராமத்தில் நிரம்பி வழிவது குறிப்பிட வேண்டிய சிறப்பம்சமாகும்.

Please Wait while comments are loading...