இலவீழாபூஞ்சிரா, கோட்டயம்

இலவீழாபூஞ்சிரா எனும் இந்த இடம் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமான பிக்னிக் சிற்றுலாத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது. அழகு மலைகளின் மடியில் வீற்றிருக்கும் இது தன் ரம்மியமான இயற்கைக் காட்சிகளால் மனதை கொள்ளை கொள்ளுகிறது.

கடல் மட்டத்திலிருந்து 3200 அடி உயரத்தில் உள்ள இந்த மலைப்பகுதி மலையேற்றப்பிரியர்களுக்கு ஏற்ற இடமாக உள்ளது. பசுமையான பள்ளத்தாக்குகளின் பின்னணியில் சூரிய உதயமும் அஸ்தமனமும் வர்ணிக்க முடியாத எழிலுடன் காட்சியளிப்பதால் புகைப்பட ரசிகர்கள் விரும்பும் ஒரு இடமாகவும் இது புகழ் பெற்றுள்ளது.

கோட்டயத்திலிருந்து பாளை செல்லும் சாலையில் 55 கி.மீ தூரம் பயணித்து இந்த இலவீழாபூஞ்சிரா ஸ்தலத்தை அடையலாம். மரங்களே இல்லாத மலை என்பதால் ‘இலை விழா பசுமைப்பகுதி’ எனும் பொருளைத்தரும்படியாக ‘இலவீழாபூஞ்சிரா’ எனும் பெயர் இந்த இடத்துக்கு வழங்கப்படுகிறது.

தோணிப்புரா, மான்குண்ணு மற்றும் கொடயத்தூர்மால் எனும் மூன்று குன்றுகள் சூழ்ந்திருக்க பிரமிக்க வைக்கும் இயற்கை எழிலுடன் இந்த இலவீழாபூஞ்சிரா காட்சியளிக்கிறது.

இந்த மலைகளிலிருந்து கோட்டயம், இடுக்கி, பத்தனம்திட்டா, எர்ணாகுளம், திரிஸ்ஸூர் மற்றும் ஆலப்புழா போன்ற பகுதிகளை பார்த்து ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...