செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச், கோட்டயம்

முகப்பு » சேரும் இடங்கள் » கோட்டயம் » ஈர்க்கும் இடங்கள் » செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச்

கோட்டயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் இந்த செயிண்ட் மேரி ஆர்த்தடாக்ஸ் சர்ச் எனும் தேவாலயம் அமைந்துள்ளது. இது 1579ம் ஆண்டில் தெக்கும்கூர் ராஜாவால் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்த்தடாக்ஸ் சிரியன் சர்ச் சபையின் கீழ் அடங்கியுள்ள இந்த தேவாலயம் கேரள பாணியையும் போர்த்துகீசிய பாணியையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சுவர்களில் மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய பாணி சுவரோவியங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.

கிறிஸ்துவ பைபிள் காட்சிகள் மட்டுமல்லாமல் இதர பொதுவான காட்சிகளும் இந்த ஓவியங்களில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வருடந்தோறும் ஏராளமான பயணிகளை இந்த புராதன தேவாலயம் ஈர்த்து வருகிறது.

நீங்கள் ஒரு கலாரசிகராக இருக்கும் பட்சத்தில் யோசிக்காமல் இந்த தேவாலயத்துக்கு விஜயம் செய்யலாம். இதன் கம்பீரமான கட்டிடக்கலை அம்சங்களும் அழகான ஓவியச்சித்தரிப்புகளும் உங்களை மெய் மறக்க வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

Please Wait while comments are loading...