சுப்ரமண்ய ஸ்வாமி கோயில், கோட்டயம்

கோட்டயத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் சங்கணாச்சேரியில் இந்த சுப்ரமண்ய ஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. கேரளாவில் முருகனுக்காக உருவாக்கப்பட்டுள்ள ஒருசில கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

மிகப்பழமையான இக்கோயில் 753ம் ஆண்டில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. ஜாதி மத பேதம் இல்லாது அனைத்து வகுப்பினரையும் அனுமதித்த முதல் கோயில் என்றும் இது புகழ் பெற்றுள்ளது.

இங்குள்ள முருகர் சிலை 6 அடி உயரத்தில் காட்சியளிக்கிறது. இந்த முருகர் சிலையின் கையில் உள்ள வேல் மேல்நோக்கி பிடிக்கப்படாமல் பூமியை நோக்கியவாறு பிடிக்கப்பட்டிருப்பது மற்றொரு விசேஷமாக சொல்லப்படுகிறது.

பள்ளீமேட்ட உத்சவம் எனும் திருவிழா இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ஹிந்து பஞ்சாங்க தனு மாதத்தின்போது (நவம்பர் - டிசம்பர் ) தொடர்ந்து பத்து நாட்களுக்கு இந்த திருவிழாச்சடங்குகள் அனுஷ்டிக்கப்படுகின்றன.

அச்சமயம் சாக்கியார் கூத்து எனும் நிகழ்ச்சி பிரதான சடங்காக நிகழ்த்தப்படுகிறது. ‘ஊராழ்ம தேவசம் போர்டு’ எனும் குழு அமைப்பால் இந்த சுப்ரமண்ய ஸ்வாமி கோயில்நிர்வகிக்கப்பட்டுவருகிறது. புராதனத்தோற்றத்துடன் காட்சியளிக்கும் இக்கோயிலுக்கு விஜயம் செய்வது மனதுக்கு சாந்தத்தை அளிக்கும் அனுபவமாக இருக்கும்.

Please Wait while comments are loading...