தழத்தங்காடி ஜும்மா மஸ்ஜித், கோட்டயம்

முகப்பு » சேரும் இடங்கள் » கோட்டயம் » ஈர்க்கும் இடங்கள் » தழத்தங்காடி ஜும்மா மஸ்ஜித்

கோட்டயம் பகுதியின் முக்கிய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக கருதப்படும் தழத்தங்காடி ஜும்மா மஸ்ஜித் கோட்டயத்திற்கு அருகில் உள்ள தழத்தங்காடி எனும் சிறு நகரில் அமைந்துள்ளது.

‘பன்னூறாண்டு’ காலத்துக்கும் மேற்பட்ட பழமையுடன் இந்த மசூதி காட்சியளிக்கிறது. இந்தியாவில் முதன் முதலாக நிர்மாணிக்கப்பட்ட மசூதிகளில் இதுவும் ஒன்று என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

‘தாஜ் ஜும்மா மஸ்ஜித்’ எனும் பெயருடனும் இந்த மசூதி அழைக்கப்படுகிறது. இந்ட மசூதியின் உருவாக்கத்தில் கேரளாவின் பல பகுதிகளை சேர்ந்த கொடையாளர்கள் பங்கேற்றுள்ளதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.

கோட்டயத்திலிருந்து 7 கி.மீ தூரத்தில் உள்ள இந்த ஜும்மா மஸ்ஜித் மீனாச்சில் ஆற்றில் கரையில் திருவெற்பு கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. கோட்டயத்திற்கு வருகை தரும் பயணிகள் தவறவிடக்கூடாத முக்கிய அம்சம் இந்த தழத்தங்காடி ஜும்மா மஸ்ஜித் ஆகும்.

Please Wait while comments are loading...