இந்த குருத்வாரா ஷீ குரு அமர்தாஸ் தொடர்புடைய வழிபாட்டுத்தலமாக அறியப்படுகிறது. ஒரு சூரிய கிரகண நாளில் தன் குடும்பத்தாரோடு அவர் இந்த குருத்வாராவுக்கு விஜயம் செய்துள்ளார்.
அக்காலத்தில் ஹிந்து கோயில்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டால் முகலாய மன்னர்களுக்கு வரி கட்ட வேண்டிய ஒரு சட்டம் இருந்தது. இருப்பினும் இவருக்கு வரி ஏதும் விதிக்காமல் புனிதயாத்திரை மேற்கொள்ள அரசரால் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சீக்கிய வகுப்பினர் மத்தியில் முக்கியமான வழிபாட்டுத்தலமாக கருதப்படும் இந்த குருத்வாரா வருடமுழுதும் ஏராளமான பயணிகளை ஈர்க்கிறது. சீக்கிய குருக்களின் பிறந்த நாட்களை ஒட்டி கொண்டாடப்படும் குருபுரப் திருவிழாக்கள் இந்த குருத்வாராவில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.



Click it and Unblock the Notifications