குருக்ஷேத்ரா நகரத்தின் எல்லைப்பகுதியில் 1 கி.மீ நீளமும் 750 மீ அகலமும் கொண்டதாக அமைந்திருக்கும் ஒரு மேட்டுப்பகுதி ஹர்ஷ் கா டிலா என்று அழைக்கப்படுகிறது.
இது தரை மட்டத்திலிருந்து 15-18 மீ உயரம் எழும்பியிருக்கிறது. இந்த மேட்டுப்பகுதியில் குஷானர்கள் காலம் மற்றும் முகலாயர்கள் காலத்தை சேர்ந்த பல வரலாற்று சான்றுகள் புதைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை இந்த மண் மேட்டில் அகழ்வாராய்ச்சி மேற்கொண்டபோது முதலாம் நூற்றாண்டு தொடங்கி 19 ம் நூற்றாண்டு வரையிலான ஆறு வெவ்வெறு கலாச்சார வரலாற்று காலங்களுக்குரிய சான்றுகள் கிடைத்துள்ளன.
ராஜபுதன, குப்த, குஷாண, பிற்கால குப்த, வர்த்தமான, சுல்தான் மற்றும் முகலாய அரசாட்சி காலங்களுக்குரிய சான்றுகள் இவற்றில் இடம் பெற்றிருப்பது ஒரு விசேஷமான அம்சமாகும்.
இங்கு கண்டெடுக்கப்பட்டவற்றில் பிற்கால குப்தர்கள் காலம் மற்றும் குஷாணர்கள் காலத்திய பொருட்கள் முக்கியமானவை. வண்ணம் பூசப்பட்ட உபயோகப்பொருட்கள் மற்றும் பலவிதமான செங்கல் கட்டுமானங்கள் ஆகியவை இவற்றில் அடங்கும்.
இந்தோ – இஸ்லாமிய காலத்துக்குரிய சில கட்டிட சிதிலங்களும் இங்கு காணப்படுகின்றன. இங்கு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தோட்டப்பூங்கா வளாகத்திலிருந்து மேலும் சில புராதனப்பொருட்கள் கிடைத்திருக்கின்றன.
தொல்லியல் மற்றும் வரலாற்று ரசிகர்களுக்கு பிடித்தமான ஸ்தலம் இந்த ஹர்ஷ் கா டிலா என்பதில் சந்தேகமில்லை.



Click it and Unblock the Notifications