Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குருக்ஷேத்ரா » ஈர்க்கும் இடங்கள் » கிருஷ்ணா மியூசியம்

கிருஷ்ணா மியூசியம், குருக்ஷேத்ரா

50

இந்தியாவின் மிக முக்கியமான பழமையான இதிஹாசமான மஹாபாரதம் முழுதுமே கிருஷ்ணரை மையமாகக்கொண்டு பின்னப்பட்டிருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. எல்லா பாத்திரப்படைப்புகளும் கிருஷ்ணரால் இயக்கப்பட்டு தங்கள் செயல்களை நிகழ்த்துவதாக இந்த காவியத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தெய்வீக பிறப்பு மற்றும் வீரம் போன்ற அம்சங்களை கொண்டிருந்த கர்ணன், துரோணச்சாரியா மற்றும் பீஷ்ம பிதாமகர் ஆகிய அனைவருக்குமே கிருஷ்ணரின் வல்லமையும் இயக்கமும் தெரிந்தே இருந்திருக்கிறது. இருப்பினும் அவரவர் அவரவர்க்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கின்றனர்.

குருக்ஷேத்ரா நகர வளர்ச்சி வாரியத்தின் மூலம் இந்த கிருஷ்ணா மியூசியம் 1987ம் ஆண்டு துவங்கப்பட்டிருக்கிறது. பின்னர் இது தற்போதுள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டிருக்கிற்து.

அப்போதைய குடியரசுத்தலைவரான ஆர். வெங்கடராமன் அவர்கள் இதனை திறந்து வைத்துள்ளார். 2012ம் ஆண்டில் மேலும் இரண்டு அங்கங்கள் இந்த வளாகத்தில் சேர்க்கப்பட்டு ஷீமதி பிரதிபா பாடீல் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவற்றில் மல்டிமீடியா மஹாபாரதா மற்றும் கீதா கேலரி போன்றவை இடம் பெற்றுள்ளன.

விஷ்ணுவின் அவதாரமான ஷீகிருஷ்ணர் போதித்த தத்துவங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு பொருட்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன். கலைப்பொருட்கள், சிற்பங்கள், ஓவியங்கள், எழுத்துப்பிரதிகள், சின்னங்கள் மற்றும் இதர அரும்பொருட்கள் இந்த காட்சி தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed