Search
  • Follow NativePlanet
Share

லெக்சிப் - எங்கும் நிறைந்திருக்கும் அற்புதங்கள்!

6

மேற்கு சிக்கிமில் உள்ள சிறு நகரமான லெக்சிப் கடந்த சில ஆண்டுகளாக புகழ் பெற துவங்கியுள்ளது. இந்த அழகிய நகரம் மேற்கு சிக்கிமின் நுழைவாயில் என்றும் அழைக்கப்படுகிறது. சிக்கிமில் நீர்மின் சக்தியை உருவாக்கும் பொருட்டாக கட்டப்பட்ட முதல் அணைக்கட்டான ரங்கிட் அணைக்கட்டு லெக்சிப்பில் தான் உள்ளது. இந்த அணைக்கட்டில் சேகரிக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு 'ரங்கிட் வாட்டர் வேல்டு' என்ற பொழுதுபோக்கு பூங்காவும் உருவாக்கப்பட்டுள்ளது.

லெக்சிப் நகரத்தில் உள்ள சுற்றுலா பார்வையிடங்கள்

சுற்றுலாப் பயணிகளுக்கு ஆர்வமூட்டக் கூடிய சில சுற்றுலா தலங்களை லெக்சிப் கொண்டுள்ளது. அவற்றில் ரங்கிட் வாட்டர் வேல்டு மற்றும் கீரதேஸ்வர் மகாதேவ் கோவில் ஆகியவை முக்கியமானவை. இந்து மத இதிகாசமான மகாபாரதத்தில் இந்த கோவிலைப் பற்றி சில பகுதிகளில் சொல்லப்பட்டுள்ளது.

இந்த புகழ் பெற்ற கோவில் மட்டுமல்லாமல், பெண் தெய்வமான துர்கா மற்றும் இராமருக்கான கோவில்களும் உள்ளதால் இந்நகரம் இந்துக்களுக்கும் புனிதமான சுற்றுலாதலமாக உள்ளது.

இவை மட்டுமல்லாமல் கந்தகம் நிறைந்த வெந்நீர் ஊற்றுகளும் மற்றும் லோ கான்டோ சாங் போ குகைகளும் இந்நகரத்தின் பிற சுற்றுலா தலங்களாக அறியப்படுகின்றன.

லெக்சிப் நகரத்தின் தனித்தன்மை

சிறிய நகரமாக இருந்தாலும், நீங்கள் வேகமான நகர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, இயற்கையின் மடியில் சாய்வாக அமர்ந்து ஓய்வெடுக்க விரும்பினால் லெக்சிப் அதற்கேற்ற இடமாக இருக்கும்.

லெக்சிப் வருடம் முழுவதும் ஈரப்பதமான மற்றும் குளிர்ச்சியான பருவநிலையை பெற்றிருக்கிறது. மேலும் லெக்சிப் நகரத்தை விமானம் மற்றும் இரயில்கள் வழியாக அடைந்திட முடியும்.

லெக்சிப் சிறப்பு

லெக்சிப் வானிலை

சிறந்த காலநிலை லெக்சிப்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது லெக்சிப்

  • சாலை வழியாக
    சிக்கிமின் தலைநகரம் காங்க்டாக்கில் இருந்து 16-கிமீ தொலைவிலேயே அமைந்திருக்கும் லெக்சிப்-பிற்கு டாக்ஸிகள், ஜுப்கள் அல்லது தனியார் வாகனங்களைப் பயன்படுத்தி சாலை வழியில் அடைந்திட முடியும்.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    லெக்சிப்பிற்கு அருகிலிருக்கும் ஒரே இரயில் நிலையமாக சிலிகுரி இரயில் நிலையம் உள்ளது. இந்த இரயில் நிலையம் நாட்டின் பிற முக்கிய நரகங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    சிலிகுரிக்கு அருகில் உள்ள பக்டோக்ரா விமான நிலையம் தான் லெக்சிப்பிற்கு அருகிலுள்ள விமான நிலையமாகும். மும்பை, சென்னை, கௌகாத்தி, டெல்லி மற்றும் கொல்கத்தாவிலிருந்து தொடர்ச்சியான விமான சேவைகள் சிலிகுரிக்கு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்த விமான நிலையம் சில சர்வதேச விமான நிலையங்களுடனும் இணைக்கப்பட்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Mar,Thu
Check Out
13 Mar,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Mar,Thu
Return On
13 Mar,Fri