Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள்» மால்ஷேஜ் காட்

மால்ஷேஜ் காட்– சரித்திரத்தின் ஜன்னல்களாய் திகழ்ந்திடும் கோட்டைகள்!

13

மஹாராஷ்டிரா மாநிலத்தில் புனே மாவட்டத்தில் உள்ள மால்ஷேஜ் காட் அழைக்கப்படும் இந்த மலைப்பாதைப் பிரதேசம் ஒரு பிரபலமான சுற்றுலா ஸ்தலமாக பெயர் பெற்றுள்ளது.  

 

மால்ஷேஜ் காட் – இயற்கைக்காட்சிகளின் சொர்க்கம்

மயக்க வைக்கும் மலைக்காட்சிகளுடன் கடல் மட்டத்திலிருந்து தலை சுற்ற வைக்கும் 700 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மால்ஷேஜ் காட் மலைஸ்தலம் ஆரோக்கியமான இனிமையான பருவநிலையை கொண்டுள்ளது.

இந்த சுற்றுலாத்தலத்தில் எண்ணற்ற ஏரிகளும், பாறைகளுடன் காட்சியளிக்கும் மலைகளும் ஏராளம் நிரம்பியுள்ளன. இயற்கை ரசிகர்களுக்கும் மலையேற்ற விரும்பிகளுக்கும் மிகவும் பிடித்தமான ஸ்தலமாக இது புகழ்பெற்றுள்ளது.

வனம்போன்ற நாட்டுப்புற அழகுடன் காட்சியளிக்கும் இந்த மால்ஷேஜ் காட் பிரதேசத்தில் பல ஆறுகளும் ஓடுவதால் இது மற்ற மலைப் பிரதேசங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டு விசேஷமாக திகழ்கிறது.

இங்குள்ள பல கோட்டைகள் வரலாற்றுக்காலத்தை தரிசிக்க உதவும் ஜன்னல்களாக காட்சியளிக்கின்றன. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் நீர்வீழ்ச்சிகளும், சரணாலயத்தில் காணப்படும் பல வகைத்தாவரங்களும் உயிரினங்களும் இப்பிரதேசத்தின் குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

விசேஷமான தகவல்கள்

மால்ஷேஜ் காட் ஸ்தலம் மழைக்காலத்தில் ஒரு அற்புதமான சுற்றுலாத்தலமாக காட்சியளிக்கின்றது. மற்ற காலத்தில் சாதாரணமாக காட்சியளிக்கும் நடைப்பாதைகள் இக்காலத்தில் சொர்க்கம் போன்ற சூழலுடன் மாறுகின்றன.

மேகங்களின் வழியே இப்பாதைகளில் நடக்கும்போது நாம் பெறும் அனுபவத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அடர்த்தியான மேகங்களின் ஊடே நாம் நடக்கும்போது ஏதோ மேகத்தில் மிதப்பது போன்ற ஒரு அற்புத உணர்வு நமக்கு கிட்டுகிறது.

பறவை ரசிகர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் அரிதான புலம்பெயர் பறவைகளை இங்கு பிம்பல்காவ்ன் ஜோகா அணைப்பகுதியில் பார்க்கலாம்.  இந்த அணையின் பின்னணியில் பளபளக்கும் நீர்த்தேக்கமும் வளமான காட்டுப்பகுதியும் ரம்மியமாக காட்சியளிக்கின்றன. கவர்ச்சியான பிளாமிங்கோ பறவைகளை இங்கு பார்த்து மகிழலாம்.

கட்டிடக்கலை ஆர்வலர்கள் இங்குள்ள அஜோபா மலைக்கோட்டை, ஜீவ்தான் கோட்டை மற்றும் ஹரிஷ்சந்திரகாட் கோட்டைகளை ரசித்து பார்க்கலாம். சிவாஜி பிறந்த ஸ்தலமான ஷிவனேரி கோட்டையும் இங்கு அருகிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர இந்த மால்ஷேஜ் ஸ்தலத்தில் மலையேற்றம், நடைப்பயணம் போன்ற பொழுதுபோக்கு அம்சங்களுக்கு ஏற்ற சூழல் அமைந்திருப்பதும் விசேஷமான அம்சமாகும்.

பல்விதமான சுற்றுலா செயல்பாடுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை தன்னுள் கொண்டிருக்கும் இந்த மால்ஷேஜ் காட் வருடமுழுவதும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கின்றது. அது ஏன் என்பதை ஒரு முறை நீங்கள் இந்த ஸ்தலத்துக்கு விஜயம் செய்தால் உடனே புரிந்துகொள்வீர்கள்.

மால்ஷேஜ் காட் சிறப்பு

மால்ஷேஜ் காட் வானிலை

சிறந்த காலநிலை மால்ஷேஜ் காட்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது மால்ஷேஜ் காட்

  • சாலை வழியாக
    மால்ஷேஜ் காட் ஸ்தலத்துக்கு மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மாநில அரசுப்பேருந்துகளும் தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. மும்பை, புனே, கல்யாண் போன்ற நகரங்களிலிருந்து இந்த பேருந்து சேவைகள் அதிக அளவில் மால்ஷேஜ் காட் ஸ்தலத்துக்கு உள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    மால்ஷேஜ் காட் ஸ்தலத்திற்கு அருகாமையில் கல்யாண் ரயில் நிலையம் பயணத்துக்க்கு வசதியாக அமைந்துள்ளது. இந்த நிலையம் மஹாராஷ்டிரா மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் மால்ஷேஜ் காட் பகுதிக்கு சுலபமாக பயணிக்கும் வகையில் ரயில் சேவைகளைக்கொண்டுள்ளது. இந்த கல்யாண் ரயில் நிலையம் மால்ஷேஜ் காட் ஸ்தலத்திலிருந்து 86 கி.மீ தூரத்தில் ஒன்றரை மணி நேர பயண நேரத்தைக்கொண்டு அமைந்துள்ளது.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    மால்ஷேஜ் காட் ஸ்தலத்திலிருந்து 150கி.மீ தூரத்தில் மும்பையில் சத்ரபதி சிவாஜி விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சர்வதேச நகரங்கள் போன்றவற்றுக்கு ஏராளமான விமான சேவைகள் உள்ளன. இங்கிருந்து சிங்கப்பூர் மற்றும் நியூயார்க் போன்ற சர்வதேச நகரங்களுக்கு பயணம் செய்வது சுலபமாக உள்ளது. விமான நிலையத்திலிருந்து மால்ஷேஜ் காட் வருவதற்கு 3000 ரூபாய் வாடகையில் டாக்சிகள் கிடைக்கின்றன.இதுதவிர, நாசிக்கிலுள்ள காந்தி நகர் விமான நிலையமும், புனேயில் உள்ள லோஹேகாவ்ன் விமான நிலையமும் மால்ஷேஜ் காட் ஸ்தலத்திற்கு அருகாமையில் உள்ள உள்நாட்டு விமான நிலையங்களாக அமைந்துள்ளன.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue