Search
  • Follow NativePlanet
Share
» »அடுத்த மாதத்திற்குள் திறக்கப்படுகிறதா பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை – முழுதாக திறக்கப்படுவது எப்போது?

அடுத்த மாதத்திற்குள் திறக்கப்படுகிறதா பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை – முழுதாக திறக்கப்படுவது எப்போது?

பயண நேரத்தை வெகுவாக குறைக்கும் பெங்களூரு-சென்னை கிரீன்ஃபீல்ட் விரைவுச் சாலையை இந்த ஆண்டு டிசம்பருக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைப்பார் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் தெரிவித்தார். விரைவுச் சாலையின் கர்நாடகப் பகுதி (71 கி.மீ.) ஏறக்குறைய நிறைவடைந்த நிலையில், ஆந்திரா மற்றும் தமிழ்நாடு தொகுப்புகளில் குறிப்பிடத்தக்க பணிகள் உள்ளன. அதனால் பாதியளவு விரைவுச்சாலை இந்த ஆண்டுக்குள்ளேயே பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

பெங்களூரு-சென்னை கிரீன்ஃபீல்டு விரைவுச் சாலை

262 கிமீ நீளமுள்ள பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை கிட்டத்தட்ட 18,000 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு, கர்நாடகா (71 கிமீ), ஆந்திரப் பிரதேசம் (85 கிமீ), தமிழ்நாடு (106 கிமீ) ஆகிய மாநிலங்கள் வழியாகச் செல்லும். தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் முதன்மையான உள்கட்டமைப்பு திட்டமான பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் இந்த அதிவேக நெடுஞ்சாலை உருவாக்கப்படுகிறது. இந்த பாரிய திட்டத்திற்கு மே 26, 2022 அன்று பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். கட்டுமானத்தில் உள்ள விரைவுச்சாலை (BCE), முடிந்ததும், இரண்டு பெருநகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை மூன்று மணி நேரத்திற்குள் குறைக்கும்.

பயண நேரத்தை பாதியாக குறைக்கும் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை

பெங்களூரு-சென்னை விரைவுச் சாலை மற்றும் பெங்களூரைச் சுற்றியுள்ள நகரங்களை இணைக்கும் ரிங்ரோடு ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இரண்டு திட்டங்களும் 2024 டிசம்பரில் முடிவடையும் பாதையில் இருப்பதாக அவர் கூறினார். பெங்களூரு-சென்னை விரைவுச்சாலை முடிவடைந்தால் இரு நகரங்களுக்கிடையேயான பயண நேரத்தை இரண்டு முதல் மூன்று மணிநேரமாக கணிசமாகக் குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

bengaluru-chennaiexpressway

தமிழ்நாட்டில் துரிதமாக முடிவடைந்து வரும் வேலைகள்

தமிழ்நாட்டில், 106 கிமீ தூரம் செல்லும் கிரீன்ஃபீல்ட் விரைவுச்சாலை, குடிபாலா (AP) முதல் வாலாஜாபேட்டை, வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம், அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் மற்றும் காஞ்சிபுரம் முதல் ஸ்ரீபெரும்புதூர் வரை நான்கு தொகுப்புகளின் கீழ் கட்டப்பட்டு வருகிறது. வாலாஜாபேட்டை முதல் அரக்கோணம் வரையிலான பகுதியில் 78 சதவீதம் பணியும் அரக்கோணம் முதல் காஞ்சிபுரம் வரை 51 சதவீதம் பணியும் முடிவடைந்து உள்ளது.

மூன்று கட்டங்களாக நடைபெற்று வரும் பணிகள்

262 கிமீ நீளமுள்ள பிரதான பாதையின் கட்டுமானம் மூன்று கட்டங்களாக செயல்படுத்தப்படுகிறது (ஒவ்வொரு கட்டமும் முறையே கர்நாடகா, ஆந்திரா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களின் சீரமைப்பை உள்ளடக்கியது). மூன்று கட்டங்களாக அனைத்து பேக்கேஜ்களுக்கும் டெண்டர் விடப்பட்டு, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் பாலங்கள்

அதிவேக நெடுஞ்சாலையில் 71 வாகன சுரங்கப்பாதைகள், மேம்பாலங்கள் மற்றும் இலகுரக வாகன சுரங்கப்பாதைகள், மூன்று ரயில் பாலங்கள், 31 பெரிய பாலங்கள், 25 சிறிய பாலங்கள், 147 கல்வெட்டுகள், ஆறு சுங்கச்சாவடிகள் மற்றும் ஐந்து பரிமாற்றங்கள் ஆகியவை இடம்பெறும். நெடுஞ்சாலையில் பயணிகள் பயன்படுத்த இரண்டு ஓய்வு பகுதிகள் மற்றும் இரண்டு டிரக் லே பேக்கள் இருக்கும்.

bengaluru-chennaiexpressway1

பயன்பாட்டுக்கு வரும் பாதியளவு சாலை

ஹோஸ்கோட் முதல் மாலூர் வரை (26.4 கிமீ) ரூ.2,761.12 கோடியிலும், மாலூர் முதல் பங்கார்பேட் வரை (27.1 கிமீ) ரூ.1,496.30 கோடியிலும், பங்கார்பேட் முதல் பெத்தமங்களா வரை (17.5 கிமீ) ரூ1,047.63 கோடியிலும் முடிக்கப்பட்ட பிரிவுகள் அடங்கும். சிறிய பாலம் கட்டுவதற்கு வசதியாக ஒரு மலையை அகற்றுவது கர்நாடகாவில் முடிவடைய வேண்டிய பணி மட்டுமே மீதி இருப்பதால், இந்த ஆண்டு இறுதிக்குள் பாதியளவு சாலை பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று கூறப்படுகிறது.

ஆகஸ்ட் 2025 க்குள் முழுமையாக பயன்பாட்டுக்கு வந்துவிடும்

இந்த திட்டப்படி இரண்டு மணி நேரத்தில் பெங்களூர் - சென்னை இடையே செல்ல முடியாது. மாறாக கர்நாடகாவின் பெங்களூரு அருகே ஹோஸ்கோட்டையும், தமிழ்நாட்டின் சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரையும் இணைக்கும் நான்கு வழி அணுகல் கட்டுப்பாட்டு சாலையாகும். இந்த இரண்டு பகுதிகளை 2 மணி நேரத்தில் இணைக்கலாம் என்று முதல் கட்ட டெஸ்ட் டிரைவிங் தெரிவிக்கிறது. சென்னை பெங்களூர் எக்ஸ்பிரஸ் வே டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளது. அடுத்த மாதம் முதல் இதுவரை கட்டப்பட்ட சாலைகளில் முதல் கட்டமாக டெஸ்ட் டிரைவ் தொடங்க உள்ளதாம்.

பகுதி அளவு சாலை இப்போது திறக்கப்பட்டாலும் முழு சாலையும் ஆகஸ்ட் 2025 க்குள் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

More News

    Read more about: chennai expressway news
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+