Search
  • Follow NativePlanet
Share
» »என்னது...சென்னை டூ திருச்சி இனி வெறும் 3 மணி நேரத்திலா? அசத்தும் தெற்கு ரயில்வே

என்னது...சென்னை டூ திருச்சி இனி வெறும் 3 மணி நேரத்திலா? அசத்தும் தெற்கு ரயில்வே

தெற்கு ரயில்வே துறை அறிவித்த புதிய திட்டத்தின் மூலம், விரைவில் சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி இடையே பயண நேரம் குறைக்கப்பட உள்ளது. தற்போது, இந்த இரண்டு நகரங்களுக்கிடையில் பயண நேரம் சுமார் 5 மணி நேரமாக உள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பயண நேரம் வெறும் 3 மணி நேரத்திற்கு குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், பயணிகள் குறைந்த நேரத்தில், அதிக வசதிகளுடன் பயணம் செய்ய முடியும். இது, குறிப்பாக, தினசரி பயணிகள் மற்றும் வணிகத்துறையில் ஈடுபட்டவர்களுக்கு பெரும் நன்மையாக இருக்கும்.

Railway Station

தெற்கு ரயில்வே துறை சென்னை மற்றும் திருச்சிராப்பள்ளி இடையிலான பயண நேரத்தை குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல ரயில்களின் வேகத்தை அதிகப்படுத்தி, அதன் மூலம் பயணிகளின் பயண நேரத்தை குறைக்கும் முயற்சியில் இறங்கி வருகிறது. இதை மேலும் குறைப்பதற்காக, ரயில்வே துறை பாதை மேம்பாடுகள் மற்றும் ரயில் வேகத்தை அதிகரிக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டில் முக்கிய வழித்தடமாக இருக்கும் சென்னை -விழுப்புரம் -விருத்தாசலம் -திருச்சி வழித்தடத்தில் ரயில்கள் 90 கிமீ முதல் 100 கிமீ வரையிலான வேகத்திலேயே இயக்கப்படுகின்றன. தண்டவாளம் சீரமைப்பு, சிக்னல் முறைகளை மேம்படுத்துவது, பாலம் அமைப்பது, வேகக் கட்டுபாடுகளை அகற்றுவது, வளைவுகளை நீக்குவது உள்பட பல்வேறு பணிகள் இந்த வழித்தடத்தில் நடந்து வருகிறது.

இந்த பணிகள் முழுமையாக நிறைவுபெற்ற பின்னர் சென்னை விழுப்புரம் விருத்தாசலம் திருச்சி வழித்தடத்தில் ரயில்கள் 130 கிமீ வேகத்தில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த வழித்தடத்தில் 130 கிமீ வேகத்தில் ரயில்கள் இயக்கப்பட்டால் சாதாரண எக்ஸ்பிரஸ் ரயில்களும் சென்னையில் இருந்து திருச்சிக்கு சுமார் 3 முதல் 4 மணி நேரத்தில் சென்று விட முடியும்.

வணிக ரயில்கள் மற்றும் வந்தே பாரத் போன்ற அதிவேக ரயில்கள் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், பயண நேரத்தை மேலும் குறைக்க முடியும்.

சமீபத்தில், வந்தே பாரத் ரயில் சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டு, சென்னை எக்மோர்-நாகர்கோவில் இடையே 726 கி.மீ தூரத்தை 8 மணி 50 நிமிடங்களில் கடந்து, பயண நேரத்தை சுமார் 2 மணி நேரம் குறைத்துள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் பயணிகளுக்கு வேகமான மற்றும் வசதியான சேவைகளை வழங்குவதற்கான தெற்கு ரயில்வே துறையின் முயற்சிகளை பிரதிபலிக்கின்றன.

பயணிகளுக்க பாதுகாப்பான பயணத்துடன், விரைவான பயணத்தையும் அளித்து அவர்களின் நேரத்தை மிச்சப்படுத்து தெற்கு ரயில்வே திட்டமிட்டு, இது போன்ற பல புதிய விஷயங்களை செய்து வருகிறது. இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டால் வந்தே பாரத் ரயிலை போல் சென்னை டூ திருச்சி செல்லும் அனைத்து ரயில்களிலும் குறைந்த நேரத்திலேயே பயணம் செய்ய முடியும். இது தினசரி பயணம் செய்பவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

More News

    Read more about: southern railway chennai trichy
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+