Search
  • Follow NativePlanet
Share
» »சம்மர் லீவுக்கு ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? இ பாஸ் எப்படி வாங்கணும்னு தெரியுமா?

சம்மர் லீவுக்கு ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? இ பாஸ் எப்படி வாங்கணும்னு தெரியுமா?

சம்மர் லீவ் ஆரம்பமாகி விட்டது. கோடை வெயிலும் வாட்டி வதைக்க துவங்கி விட்டது. இதனால் குளுகுளு இடங்களை தேடி செல்லபவர்களின் முதல் சாய்சாக இருப்பது ஊட்டி, கொடைக்கானல் தான். ஆனால் அங்கு சுற்றுலா வாகனங்கள், தனி நபர் வாகனங்களில் செல்வதற்கு இ பாஸ் வாங்க வேண்டும் என முறை நடைமுறையில் உள்ளது. இந்த இ பாஸ் பற்றிய முக்கிய தகவல்கள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை தெரிந்து கொள்ளுங்கள். ஊட்டி, கொடைக்கானல் போகும் போது இந்த தகவல் நிச்சயம் பயனளிக்கும்.

Ooty

ஏன் இ பாஸ் அவசியம்?

தமிழ்நாடு அரசு, இந்த மலைப்பகுதிகளில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை கண்காணித்து, போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இ பாஸ் முறையை கோர்ட் அறிமுகப்படுத்தியுள்ளது. இது, சுற்றுலா பருவத்தில் அதிகமான வாகனங்களின் வருகையை கட்டுப்படுத்தி, பாதுகாப்பான மற்றும் சீரான சுற்றுலாவை உறுதி செய்ய உதவுகிறது.

யார் இ பாஸ் பெற வேண்டும்?

நீலகிரி அல்லது திண்டுக்கல் மாவட்டங்களில் பதிவு செய்யப்படாத வாகனங்களில் ஊட்டி அல்லது கொடைக்கானல் செல்லும் அனைத்து சுற்றுலா பயணிகளும் இ பாஸ் பெற வேண்டும். இருப்பினும், நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் இதற்கு விதிவிலக்கு அளிக்கப்படுகின்றனர்.

இ பாஸ் பெறுவதற்கான வழிமுறை :

  • அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்: https://epass.tnega.org என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
  • புதிய பயனாளர்களாக இருந்தால், உங்கள் பெயர், மின்னஞ்சல், கைபேசி எண் போன்ற விவரங்களை வழங்கி கணக்கை உருவாக்கவும். ஏற்கனவே கணக்கு உள்ளவர்களாக இருந்தால், உங்கள் நற்சான்றிதழ்களைப் பயன்படுத்தி உள் நுழையவும்.
  • விவரங்களை நிரப்பவும். பயணிகளின் எண்ணிக்கை, வாகன வகை, எரிபொருள் வகை, வருகை மற்றும் புறப்படும் தேதிகள், பயண நோக்கம், தங்கும் முகவரி போன்ற விவரங்களை வழங்கவும்.
  • அடையாள அட்டைகள், வாகன பதிவு சான்றிதழ்கள் போன்ற தேவையான ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றவும்.
  • எல்லா விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரிபார்த்து, விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கவும்
  • விண்ணப்பம் வெற்றிகரமாகச் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, ஒரு QR குறியுடன் கூடிய இ பாஸ் உருவாக்கப்படும். இதை உங்கள் சாதனத்தில் சேமிக்கவும் அல்லது அச்சடிக்கவும்; இது நுழைவு புள்ளிகளில் சரிபார்க்கப்படும்.

முக்கிய குறிப்புகள் :

  • இ பாஸ் முறை ஜூன் 30, 2025 வரை செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • சில நுழைவு புள்ளிகளில், வார நாட்களில் 6,000 வாகனங்கள் மற்றும் வார இறுதிகளில் 8,000 வாகனங்கள் வரை அனுமதிக்கப்படும்.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு காரணமாக பிளாஸ்டிக் பைகள் மற்றும் நீர் பாட்டில்களை கொண்டு செல்லுதல் தவிர்க்கப்பட வேண்டும்.

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி, உங்கள் ஊட்டி மற்றும் கொடைக்கானல் பயணத்தை சிரமமில்லாமல் மற்றும் மகிழ்ச்சியாக அனுபவிக்கலாம்.

More News

Read more about: ooty kodaikanal tamil nadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+