Search
  • Follow NativePlanet
Share
» »தமிழர்கள் பெங்களூரு விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் எப்படி செல்வது – டிக்கெட்களை ரத்து செய்யலாமா?

தமிழர்கள் பெங்களூரு விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் எப்படி செல்வது – டிக்கெட்களை ரத்து செய்யலாமா?

காவிரி நீரை திறக்க முடியாது என கர்நாடக அரசு கூற, திறந்தே ஆக வேண்டும் என்று என தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. அதன்படி காவிரி மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடக் கோரி உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்த நாளிலிருந்து கர்நாடகாவில் பல்வேறு தரப்பிலிருந்து பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது! இந்நிலையில் பெங்களூர் விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் செல்ல வேண்டிய தமிழர்கள் என்ன செய்வது என்ற குழப்பம் எழுந்துள்ளது.

கர்நாடகவில் முழு அடைப்பு போராட்டம்

கர்நாடக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கன்னட ஆதரவு அமைப்புகள் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் இணைந்து செப்டம்பர் 26-ம் தேதி பெங்களூரு பந்த் (பணிநிறுத்தம்) நடத்த அழைப்பு விடுத்துள்ளன. அதே நாளில் கர்நாடகா பந்த் நடத்தவும் திட்டமிட்டுள்ளதாகவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள், ஆட்டோ, ரிக்ஷா, BMTC பேருந்துகள் இயங்காது என்பதால் கர்நாடக முழுக்க இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1

இரு மாநில எல்லைகளிலும் நிலவும் பதற்றம்

பெங்களூருவை நோக்கிய 90 சதவீதத்திற்கும் அதிகமான போக்குவரத்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ஓசூர் வழியையே சார்ந்து இருக்கிறது. தினசரி ஓசூர், கிருஷ்ணகிரியிலிருந்து பெங்களூருவிற்கும், பெங்களூருவிலிருந்து ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரிக்கும் வேலை நிமித்தமாக ஆயிரக்கணக்கான மக்கள் பயணிக்கின்றனர். காவிரி நதிநீர் பிரச்சினை காரணமாக இரு மாநில எல்லைகளிலும் பதற்றம் நிலவி வருவதால் மக்கள் சற்று குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர். இன்று இரவு 8 மணியிலிருந்து தமிழக பேருந்துகள் கர்நாடகா செல்லாது என கூறப்பட்டுள்ளது.

3

நீங்கள் பெங்களூரு விமான நிலையம் அல்லது ரயில் நிலையம் செல்ல வேண்டுமா

வெளிநாட்டு அல்லது உள்நாட்டு விமான சேவைக்காக நீங்கள் பெங்களூரு விமான நிலையம் செல்ல வேண்டுமா. அல்லது பெங்களூரு ரயில் நிலையம் செல்ல வேண்டுமா? அப்படியானால் இன்று இரவு 7 மணிக்குள்ளாகவே ஓசூரில் இருந்து பெங்களூர் செல்வது சிறந்தது. ஓசூரில் இருந்து பெங்களூருவிற்கு தமிழக மற்றும் கர்நாடக அரசு பேருந்துகள் இயங்குகின்றன. இரவு 8 மணிக்குள்ளாகவே பெங்களூரு செல்ல மறக்காதீர்கள். இலையென்றால் ரயில் சேவையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

2

டிக்கெட்டை ரத்து செய்யும் பொதுமக்கள்

பல்வேறு இடங்களிலிருந்தும் பெங்களூரு வர டிக்கெட் புக் செய்த பயணிகள் பலரும் டிக்கெட்டை ரத்து செய்து வருகின்றனர். பெங்களூர் பந்த் காரணமாக ரத்து மற்றும் மறு திட்டமிடல் கோரிக்கைகள் வந்த வண்ணம் உள்ளன. விமானம் மூலம் பெங்களூரு வந்து விடலாம், ஆனால் அங்கிருந்து நீங்கள் வீடு அல்லது அலுவலகத்திற்கு எப்படி செல்வது? ஆட்டோ, ரிக்ஷா, பேருந்து, கேப் எதுவும் இயங்காது என்பதால் பெரும்பாலான பயணிகள் விமான மற்றும் ரயில் டிக்கெட்டை ரத்து செய்து வருகின்றனர்.

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் விமான ஆபரேட்டர்கள்

பெங்களூர் பந்த் காரணமாக ரத்து மற்றும் மறு திட்டமிடல் கோரிக்கைகள் நிறைய எழவும் கடைசி நேரத்தில் பயணத்தை மறு தேதிக்கு மாற்றி வைக்க பல பயணிகள் முயன்று வருகின்றனர். இதன் காரணமாக பயண தேதியை மாற்ற முயலும் பயணிகளுக்கு விமான ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் விதிக்கின்றனர். எடுத்துக்காட்டாக பேகூர் சாலையில் வசிக்கும் நமது நண்பர் ஒருவர், பெங்களூரிலிருந்து டெல்லிக்கு தனது விமான பயண தேதியை மாற்ற ரூ. 3400 கூடுதல் கட்டணமாக செலுத்தியுள்ளார்.

நீங்கள் உங்கள் டிக்கெட்டுகளை மறு தேதிக்கு ஒத்தி வைக்கலாம் அல்லது முன்னதாகவே பெங்களூர் அடைந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். உங்களது கருத்துக்களை கூறுங்கள்!

கெம்பகவுடா சர்வதேச விமான நிலைய நிர்வாகம், பயணிகள் எந்தவிதமான இடையூறுகளையும் தவிர்க்கும் வகையில் விமான நிலையத்தை விரைவில் அடையுமாறு அறிவுறுத்தியுள்ளது. இதனை மனதில் வைத்து சற்று முன்னதாகவே கிளம்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

More News

    Read more about: bangalore cauvery dispute
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+