• Follow NativePlanet
Share
» »2 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா - இப்படி செய்யுங்கள்!

2 மணி நேரத்தில் திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா - இப்படி செய்யுங்கள்!

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் தரிசனம் வெறும் 2-3 மணி நேரத்தில் கிடைக்க வேண்டுமா? உங்களுக்காகவே திருமலை திருப்பதி தேவஸ்தானம் வழங்கும் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய இதுவே சரியான நேரம். நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் எந்த சிரமுமின்றி திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருகின்ற திங்களன்று (நவம்பர் 25) வெளியிடப்படும் டிக்கெட்டுகளை புக் செய்து விடுங்கள்!

Tirupati Balaji darshan booking for February 2025

பிப்ரவரி 2025க்கான டிக்கெட் வெளியீடு

உலக பிரசித்தி பெற்ற இந்த கோயிலில் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். கூட்டநெரிசலை குறைக்கும் வகையில் பக்தர்கள் வசதிக்காக இலவச தரிசனம், சிறப்பு தரிசனம் ஆகிய முறைகளில் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் ரூ.300 சிறப்பு தரிசன டோக்கன் மூலம் தினசரி 35,000 டிக்கெட் வீதம் ஆன்லைனில் முன்கூட்டியே வழங்கப்பட்டு வருகிறது. 2025 பிப்ரவரி மாதத்தில் நீங்கள் திருப்பதி செல்ல விரும்பினால், நவம்பர் 25 ஆம் தேதி டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள்!

குறுகிய நேரத்தில் சுவாமி தரிசனம்

அனைவருக்குமே திருப்பதி செல்ல வேண்டும் என்ற எண்ணமுண்டு. ஆனால் சர்வ தர்ஷனில் அவர்கள் நம்மை குடவுனில் மணி கணக்கில் காத்திருக்க வைக்கிறார்கள். அவர்களும் கூட்டம் கூட்டமாக மக்கள் திருமலையை நோக்கி படையெடுக்கும் அவர்களுக்கும் வேறு வழியில்லை அல்லவா? ஆனால் இதில் சிக்கி கொள்ளாமல் சுவாமி தரிசனம் செய்ய நமக்கு வேறு வழி உள்ளது. அது தான் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட். இதனை புக் செய்தால் போதும், அதிக நேரம் காத்திருக்காமல் சில மணி நேரங்களில் சுவாமி தரிசனம் செய்யலாம்.

Tirupati Balaji darshan booking for February 2025

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக் செய்வது எப்படி

1. திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in/ பார்வையிடவும்.

2. புக்கிங் நவம்பர் 25 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும், ஆகவே நீங்கள் ஒரு 5 நிமிடங்களுக்கு முன்னரே உங்கள் நல்ல இன்டர்நெட் கனெக்ஷன் உள்ள போன், கணினி, லேப்டாப் தயாராக வைத்துக் கொள்ளவும்.

3. மெய்நிகர் வரிசையில் காத்திருங்கள். டிக்கெட்டுகளின் எண்ணிக்கை மற்றும் பதிவு செய்ய முயற்சிக்கும் பக்தர்களைப் பொறுத்து, காத்திருக்கும் நேரம் பொதுவாக 5-6 நிமிடங்கள் ஆகும்.

4. மொபைல் எண் போன்ற தேவையான உள்நுழைவுச் சான்றுகளை உள்ளிட்டு, கேப்ட்சா குறியீட்டை நிரப்பி, 'Generate OTP' என்பதைக் கிளிக் செய்யவும். செல்லுபடியாகும் 6 இலக்க OTP ஐ உள்ளிட்டு, 'உள்நுழை' விருப்பத்தை கிளிக் செய்யவும்.

5. நீங்கள் பார்வையிட விரும்பும் தேதிகளைத் தேர்ந்தெடுக்கக்கூடிய காலெண்டர் காண்பிக்கப்படும். தேதியைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் தரிசனம் செய்ய விரும்பும் நேரத்தை எடுக்க வேண்டும்.

6. அதில் பச்சை நிறம் காலியாக இருப்பதையும், சிகப்பு நேரம் புக்கிங் முடிந்து விட்டதையும் குறிக்கும்.

7. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

8. பெயர், வயது, பாலினம், புகைப்பட அடையாளச் சான்று, அடையாள அட்டை எண் போன்ற யாத்ரீகர்களைப் பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து "தொடரவும்" என்பதைக் கிளிக் செய்யவும். உள்ளிடப்பட்ட அனைத்து விவரங்களையும் தெளிவாகச் சரிபார்த்து, ஏதேனும் தவறுகள் இருந்தால் திருத்தவும்.

9. தரிசனத்திற்கான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு வழங்கப்பட்ட மின்னஞ்சல் ஐடி/மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். தரிசனத்திற்கு எடுத்துச் செல்ல டிக்கெட்டின் பிரிண்ட் அவுட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

Tirupati Balaji darshan booking for February 2025

நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய இதர விஷயங்கள்

1. நுழைவு நேரத்தில், அனைத்து யாத்ரீகர்களும் முன்பதிவின் போது பயன்படுத்தப்பட்ட அதே அசல் புகைப்பட ஐடியை சமர்ப்பிக்க வேண்டும். 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு சுவாமி தரிசனம் இலவசம்.

2. பக்தர்கள் பாரம்பரிய உடைகளை மட்டுமே அணிய வேண்டும். ஆண்கள் வேட்டி, சட்டை / குர்தா, பைஜாமா அணியலாம். பெண்கள் சேலை / அரை சேலை / துப்பட்டாவுடன் சுடிதார் அணியலாம்.

3. தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் பக்தர்கள் தங்களின் ரசீது அச்சிடப்பட்ட நகலை கொண்டு வர வேண்டும்.

4. குழு டிக்கெட்டில் உள்ள அனைத்து யாத்ரீகர்களும் தரிசனத்திற்கு ஒன்றாக செல்ல வேண்டும்.

உங்கள் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் திருப்பதி பாலாஜியை தரிசனம் செய்ய மறக்காமல் டிக்கெட் புக் பண்ண மறக்காதீர்கள்!

More News

    Read more about: balaji tirupati tirumala
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+