Search
  • Follow NativePlanet
Share
» »அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் 1 லட்சம் லட்டுகள் விநியோகம்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு திருப்பதி ஏழுமலையான் கோவில் சார்பில் 1 லட்சம் லட்டுகள் விநியோகம்!

வரலாற்று சிறப்பு மிக்க அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருகிறது. ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் மகா கும்பாபிஷேகத்தில் பங்கேற்கும் விருந்தினர்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் ஆந்திராவின் திருப்பதியில் உள்ள வெங்கடேசப் பெருமானுக்கு வழங்கப்படும் புகழ்பெற்ற பிரசாதமான 'ஸ்ரீவாரி லட்டு' வழங்கப்படுகிறது.

ஜனவரி 22 ஆம் தேதி கோலாகலமாக கும்பாபிஷேகம்

பிரதமர் நரேந்திர மோடி, பல புகழ்பெற்ற விவிஐபிக்கள் மற்றும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் முன் அயோத்தியில் ராமர் கோவில் ஜனவரி 22 ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. கோயில் அறக்கட்டளை, ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ராவின் அழைப்பாளர் பட்டியலில் அரசியல்வாதிகள், பாலிவுட் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பலர் உட்பட 7,000 பேர் உள்ளனர்.

பிரசாதமாக 1 லட்சம் திருப்பதி லட்டு

ராமர் கோயில் திறப்பு விழாவை முன்னிட்டு இந்தியாவின் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் இருந்து அயோத்திக்கு பிரசாதங்கள் அனுப்பப்பட்டு வருகிறது. கோயிலின் திறப்பு விழாவில் வழங்கப்படும் பிரசாதங்களில் உலகப்பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டுவும் அடங்குகிறது. இதற்காக திருமலை ஏழுமலையான் பிரசாதமாக வழங்கப்படும் திருப்பதி லட்டு 1 லட்சம் அயோத்திக்கு அனுப்படப்பட உள்ளது.

ayodhyaramtemple4

25 கிராம் எடையில் வழங்கப்படும் திருப்பதி லட்டு

அயோத்தியில் உள்ள ராம் மந்திரில் நடைபெறும் ஸ்ரீ ராம் பிராண பிரதிஷ்டை (கும்பாபிஷேகம்) விழாவில் பார்வையாளர்களுக்கு விநியோகம் செய்வதற்காக தலா 25 கிராம் எடையுள்ள ஒரு லட்சம் லட்டுகளை வழங்க TTD ஒப்புக்கொண்டதாக TTD நிர்வாக அதிகாரி AV தர்மா ரெட்டி செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

பெருமைக் கொள்ளும் திருமலை திருப்பதி தேவஸ்தானம்

"சனாதன தர்மத்தைப் பின்பற்றுபவர்கள் அனைவருக்கும் கும்பாபிஷேகம் ஒரு வரலாற்று தருணம். இந்து மதம், கலாச்சாரம் மற்றும் விழுமியங்களைப் பரப்புவதே TTDயின் முதன்மை நோக்கம் என்பதால், ராம ஜென்மபூமி பூஜையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றதற்கு நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்று ரெட்டி கூறினார்.

ராமர் கோயிலைப் பற்றி நாம் அறிந்திராத விஷயங்கள்

1. ராமர் கோயில் காட்டப்படும் இடம் சாகேத் என்று அழைக்கப்படும் ராமரின் பிறந்த இடம், இது இந்தியாவின் பண்டைய நகரம் மற்றும் இந்துக்களின் 7 புனித நகரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

2. பாரம்பரிய நாகரா பாணியில் கட்டப்பட்ட ராம் மந்திர் வளாகம், 380 அடி நீளம் (கிழக்கு-மேற்கு திசை), 250 அடி அகலம் மற்றும் 161 அடி உயரத்தை எட்டும்.

3. சடங்குகளுக்காக 2000 க்கும் மேற்பட்ட புனிதத் தலங்களில் இருந்து மண் மற்றும் 100 க்கும் மேற்பட்ட ஆறுகளில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டது.

4. 392 தூண்கள் மற்றும் 44 வாயில்களால் அலங்கரிக்கப்பட்ட கோவிலின் அமைப்பு ஒவ்வொன்றும் 20 அடி உயரம் கொண்ட தளங்களைக் கொண்டிருக்கும்.

5. இந்து நம்பிக்கைகளுக்கு ஏற்றவாறு கோயில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

6. வலிமை மற்றும் நீண்ட ஆயுளுக்கு பெயர் பெற்ற ராஜஸ்தானில் உள்ள பன்சி மலைகளில் இருந்து வரும் கற்கள் ராமர் கோவில் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படுகிறது.

7. பிரதான அமைப்பைச் சுற்றி 4 சிறிய கோயில்கள் எழுப்படவுள்ளன. அஸ்திவாரத்தை அமைப்பதற்காக 'ஸ்ரீ ராம்' என்று பொறிக்கப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

8. 3 தளங்கள், 1 ஷிகர் மற்றும் 5 குவிமாடம் வடிவ மண்டபங்களுடன் மிகவும் பிரமாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகிறது.

9. முதலில் உயரம் 141 அடியாக நிர்ணயிக்கப்பட்டு பின்னர் 161 அடியாக உயரம் அதிகரிக்கப்பட்டது.

More News

    Read more about: ram mandir ayodhya
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+