உலகப்பிரசித்திப் பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானம் சென்னைக்கு அருகாமையில் இருப்பது நமது அதிர்ஷ்டம் தான். சென்னையிலிருந்து திருப்பதி தினசரி பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டாலும், நமது சொந்த வாகனங்களில் சாலை வழியாக திருப்பதிக்கு குடும்பத்தினருடன் செல்வது மிகவும் உற்சாகமாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் ரயில் மற்றும் பேருந்தில் செல்வதை விட விரைவாகவும் செல்லலாம்.
வழக்கமாக சென்னையில் இருந்து திருப்பதிக்கு செல்ல மூன்றரை மணி நேரம் ஆகும், இந்நிலையில் திருவள்ளூர்-திருப்பதி இடையே ரூ.985 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் சென்னை-திருப்பதி இடையேயான பயணம் வெறும் 2 மணி நேரமாக குறையவுள்ளது!
சென்னை to திருப்பதி வெறும் இரண்டே மணி நேரம் தான்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) திருவள்ளூரில் இருந்து திருப்பதி வரையிலான நான்கு வழிச்சாலையை ரூ.985 கோடி மதிப்பீட்டில் ஆகஸ்ட் மாதத்திற்குள் தொடங்க உள்ளது. திருவள்ளூர் மற்றும் திருப்பதி இடையேயான பயண நேரத்தை 90 நிமிடங்களாக குறைக்க இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் சென்னையிலிருந்து இரண்டே மணி நேரத்தில் திருப்பதியை நீங்கள் அடைந்திடலாம்.

44 கிமீ நீளம் அணுகல் கட்டுப்பாடு
டெண்டர் செயல்முறை முடிவடைந்ததைத் தொடர்ந்து, சாலை விரிவாக்கத் திட்டம் ஓரியண்டல் ஸ்ட்ரக்ச்சுரல் இன்ஜினியர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சுங்கச்சாவடிகள் நிறுவப்படும் இரண்டு சந்திப்புப் புள்ளிகளைத் தவிர, உள்ளூர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்களின் நுழைவு மற்றும் வெளியேறலைக் கட்டுப்படுத்தும் வகையில் 44 கிமீ நீளம் அணுகல் கட்டுப்பாட்டில் இருக்கும்.
தற்போதைக்கு போக்குவரத்து மாற்றம்
இத்திட்டத்தில் தற்போதைய இருவழிச் சாலைகளை நான்கு வழிச்சாலையாக சர்வீஸ் சாலைகளுடன் விரிவுபடுத்துவதும், உள்ளூர் பயணிகளுக்கு உதவும் வகையில் முக்கிய சந்திப்புகளில் 20 சுரங்கப்பாதைகள் அமைப்பதும் அடங்கும். கட்டுமான பணிகள் தொடங்கும் போது இந்த சந்திப்புகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
புதிய நான்கு வழிச்சாலை
தற்போதைய 2 வழிச் சாலைகள் 4 வழிச் சாலைகளாக விரிவுபடுத்தப்பட்டு, சர்வீஸ் சாலைகள் மற்றும் உள்ளூர் பயணிகளுக்கு உதவும் வகையில் முக்கிய சந்திப்புகளில் 20 சுரங்கப்பாதைகள் அமைக்கப்படும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த சந்திப்புகளில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். NH716 அல்லது சென்னை-திருப்பதி நெடுஞ்சாலை பாடியில் தொடங்கி தற்போது திருநின்றவூர் வரை 4 வழிச்சாலையாக உள்ளது. திருநின்றவூர் - திருவள்ளூர் இடையேயான நடுப்பகுதி ரூ.304 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுகிறது. 2024 இறுதிக்குள், இது விரிவுபடுத்தப்படும்.
சென்னையில் இருந்து திருப்பதி செல்லும் வாகன ஓட்டிகள், பைபாஸ்கள் மூலம் திருவள்ளூர் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.



Click it and Unblock the Notifications





