• Follow NativePlanet
Share
» »இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இங்கே வேலை இல்லை, கடைகளும் நடத்த கூடாது - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இங்கே வேலை இல்லை, கடைகளும் நடத்த கூடாது - திருப்பதி தேவஸ்தானம் அதிரடி!

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) புதிய தலைவர் பி ஆர் நாயுடுவின் முதல் கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில முக்கிய முடிவுகள் இந்தியாவின் கவனத்தை திசை திருப்பியுள்ளது. அவற்றில் தரிசன நேரத்தை இரண்டு முதல் மூன்று மணி நேரமாகக் குறைப்பது, அரசியல் அறிக்கைகள் வெளியிட தடை, லட்டு தயாரிப்பதற்கு உயர்ந்த தரமான நெய் கொள்முதல், இந்துக்கள் அல்லாதவர்களை இடமாற்றம் செய்வது என பல முடிவுகள் எடுக்கப்பட்டன. இந்துக்கள் அல்லாதவர்கள் இடமாற்றம் செய்வது, இந்துக்கள் அல்லாதவர்கள் கடை நடத்தக்கூடாது என எடுக்கப்பட்ட முடிவு அனைவரின் கவனத்தையும் திசை திருப்பியுள்ளது!


பக்தர்கள் காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடிவு

ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு நடந்த முதல் கூட்டம் இதுவாகும். TTD நிர்வாக அதிகாரி ஜே. சியாமளா ராவ் கூறுகையில், வெங்கடேவரா தரிசனத்திற்காக காத்திருக்கும் நேரத்தைக் குறைப்பதற்கான வழிகளை ஆராய வேண்டும், பக்தர்கள் விடுமுறை மற்றும் பண்டிகை காலங்களில் 30 மணி நேரம் வரை காத்திருக்கின்றனர். இதற்காக, செயற்கை நுண்ணறிவு மற்றும் பிற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பக்தர்களின் நெரிசலைக் குறைப்பதற்கும், ஒழுங்குபடுத்துவதற்கும் வழிகளை பரிந்துரைக்க, தரிசன நேரத்தை 2-3 மணி நேரமாக குறைக்கவும் TTD நிபுணர்கள் குழுவை அமைக்கும் என்று அவர் அறிவித்தார்.

Tirupati


இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இங்கே இடம் இல்லை

திருமலையில் பணிபுரியும் இந்துக்கள் அல்லாதவர்கள் குறித்து தகுந்த முடிவு எடுக்குமாறு மாநில அரசுக்கு கடிதம் எழுதவும் TTD முடிவு செய்துள்ளது என்று ராவ் கூறினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கோவிலில் பணிபுரியும் இந்து அல்லாத மத ஊழியர்களுக்கு மற்ற அரசு நிறுவனங்களில் மறுவாழ்வு அளிக்கப்பட வேண்டும் அல்லது VRS வழங்கப்பட வேண்டும் என்று TTD விரும்புகிறது. இது அனைத்து கோயில் ஊழியர்களும் TTDயின் மத மற்றும் ஆன்மீக விழுமியங்களுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதே போல வேறு மதத்தை சார்ந்த எவரும் திருமலையில் கடை வைத்திருக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.


அரசியல் வசனம் எதுவும் இங்கே வேண்டாம்

கோவிலில் பிரார்த்தனை செய்த பிறகு அரசியல்வாதிகள் அறிக்கைகள் அல்லது உரைகளை வழங்குவதைக் குறிப்பிட்டு, திருமலையில் அரசியல் சார்பு பாராமல் இதுபோன்ற அறிக்கைகள் அல்லது பேச்சுகளை TTD வாரியம் தடை செய்துள்ளது. அப்படிப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களைப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது தேவைப்பட்டால் சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ராவ் கூறினார்.

Tirupati


திருப்பதி பிரசாத சுவையை மேம்படுத்த முடிவு

கோவிலின் லட்டுகள் தொடர்பாக மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட சர்ச்சைக்குப் பிறகு, தயாரிப்புக்கு "மேம்படுத்தப்பட்ட" நெய்யைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஆலய நிர்மானம் அறக்கட்டளையை (ஸ்ரீவாணி) டிடிடியின் கணக்கில் இணைக்கவும், பல்வேறு மாநிலங்களின் சுற்றுலா நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட தரிசன ஒதுக்கீட்டை நிறுத்தவும் வாரியம் முடிவு செய்துள்ளது. திருமலை குப்பை கிடங்கில் குவிந்து கிடக்கும் குப்பைகளை, நான்கு மாதங்களுக்குள் அகற்றவும் வாரியம் முடிவு செய்துள்ளது.


இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன

திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) வெங்கடேஷ்வர் கோவிலில் இந்துக்கள் மட்டுமே சேவை செய்ய அனுமதிக்கும் முடிவை மத்திய அமைச்சர் ஜி கிஷன் ரெட்டி வரவேற்றுள்ளார். TTD வாரியத்தின் முடிவை நான் வரவேற்கிறேன். சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கான அதன் முதல் முயற்சியாக, வெங்கடேஸ்வர சுவாமிக்கு அருகில் பணிபுரிபவர்கள் இந்துக்களாக மட்டுமே இருக்க வேண்டும் என்று வாரியம் முடிவு செய்துள்ளது. இந்துக்கள் அல்லாதவர்கள் அங்கு இருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார்.

திருமலை தேவஸ்தானத்தின் இந்த முடிவை வரவேற்றும் எதிர்மறை கருத்துக்கள் தெரிவித்தும் நெட்டிசன்கள் வரவேற்று வருகின்றனர்!

More News

    Read more about: tirupati tirumala andhra pradesh
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+