Search
  • Follow NativePlanet
Share
» »திருப்பதி கோயிலுக்கு அருகே எதற்கு முஸ்லிம் ஹோட்டல் – உண்ணாவிரதத்தில் இறங்கிய சாதுக்கள்!

திருப்பதி கோயிலுக்கு அருகே எதற்கு முஸ்லிம் ஹோட்டல் – உண்ணாவிரதத்தில் இறங்கிய சாதுக்கள்!

உலகப்பிரசித்தி பெற்ற இந்து கோயிலான திருப்பதி ஏழுமலையான் கோயில் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்களை ஈர்க்கிறது. இந்துக்கள் தவிர வேறு மதத்தினர் யாரும் கோயிலுக்குள் செல்ல கூட அனுமதி இல்லை, இப்படி இருக்க புனித திருமலை மலைகளின் நுழைவாயிலான அலிபிரி அருகே 'மும்தாஜ் ஹோட்டல்' கட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து, திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வாக அலுவலகம் முன் ஒரு துறவிகள் குழு காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கியுள்ளது!

Tirupati

மும்தாஜ் ஹோட்டல் கட்டுமானத்தை எதிர்த்து போராட்டம்

திருப்பதியில் மும்தாஜ் ஹோட்டல் லிமிடெட் நிறுவனத்தின் கீழ் ஆடம்பர ரிசார்ட் திட்டம் கட்டப்படுவதை எதிர்த்து ஆந்திராவில் சாதுக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். திருமலை மலைகள் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலின் புனிதத்திற்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி, ஆந்திரப் பிரதேசத்தின் திருப்பதி மாவட்டத்தில் புதிய போராட்டங்கள் வெடித்தன. ஏழு புனித மலைகளில் ஒன்றின் அடிவாரத்தில் 'மும்தாஜ் ஹோட்டல்' என்ற ஆடம்பர ரிசார்ட் கட்டுவதற்கு எதிராக 'சாதுக்கள்' ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

திருமலையின் புனிதத்தை கெடுக்க வேண்டாம்

ஆந்திரப் பிரதேச சாது பரிஷத் தலைவர் ஸ்ரீனிவாசானந்த சரஸ்வதி சுவாமி தலைமையிலான போராட்டக் குருக்கள், திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) நிர்வாகக் கட்டிடத்தின் முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். அலிபிரி ஸ்ரீவாரி படாலுக்கு அருகிலுள்ள ரிசார்ட் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். போராட்டக் குருக்களின் கூற்றுப்படி, ஹோட்டல் கட்டுமானம் திருமலை மலைகள் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோயிலின் புனிதத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது.

Tirupati

கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த கோரிக்கை

சமீபத்திய மாதங்களில் ஹோட்டல் கட்டுமானத்திற்கு எதிராக நடைபெறும் இரண்டாவது போராட்டம் இதுவாகும். டிசம்பர் 2024 இல், ஸ்ரீ வெங்கடேஸ்வரா விலங்கியல் பூங்காவிற்கு அருகில் உள்ள மும்தாஜ் ஹோட்டலின் கட்டுமானத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இந்து சைதன்ய சமிதி மற்றும் பிற இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.

தொடர்ந்து அரங்கேறி வரும் எதிர்ப்புகள்

ஆந்திராவில் உள்ள பல மதக் குழுக்களும் தனிநபர்களும் பல்வேறு சமூக ஊடக தளங்களில் இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளனர், இது போன்ற ஒரு திட்டம் மத உணர்வுகளையும் ஏழு மலைகளின் புனிதத்தையும் புண்படுத்தும் என்று கூறியுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தைத் தவிர, டாடா நகரில் உள்ள நகராட்சி மேம்பாட்டு அலுவலகத்திற்கு வெளியே இந்து சைதன்ய சமிதி மற்றும் பிற இந்து அமைப்புகளின் உறுப்பினர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்கள், பதாகைகளை ஏந்தியும், சங்குகளை ஊதியும், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர் மற்றும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அழைப்பு விடுத்தனர்.

முன்னாள் முதல்வர் பிறப்பித்த அரசாணை

2021 ஆம் ஆண்டில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஆந்திர அரசு பிறப்பித்த அரசு உத்தரவு (GO), மாநில அரசின் 2020-2025 சுற்றுலாக் கொள்கையின் கீழ் ஊக்கத்தொகைகள் மூலம் உருவாக்கப்பட வேண்டிய ஒரு பெரிய அளவிலான சொகுசு சுற்றுலாத் திட்டத்தை முன்மொழிந்தது. இதன் கீழ் தான் மும்தாஜ் ஹோட்டல் கட்டப்படவிருக்கிறது.

இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன

இந்த அரசாணையின் கீழ், டெவலப்பர், அதாவது மும்தாஜ் ஹோட்டல் லிமிடெட் (தி ஓபராய் குழுமத்தின் துணை நிறுவனம்) 20 ஏக்கர் நிலத்தில் 100 சொகுசு வில்லாக்களைக் கொண்ட ஒரு ஹோட்டல் திட்டத்தை ரூ.250 கோடி ஆரம்ப முதலீட்டில் கட்டும். சுமார் 1,500 வேலை வாய்ப்புகளைக் கொண்ட இந்த திட்டத்தில், பல உணவு வகைகள், சிறந்த உணவகங்கள், மாநாடு மற்றும் விருந்து வசதிகள், காபி ஷாப், பார் மற்றும் லவுஞ்ச், ஸ்பா மற்றும் உடற்பயிற்சி மையம் மற்றும் நீச்சல் குளம் போன்ற பிற வசதிகளுடன் இருக்கும்.

வெறும் ஹோட்டல் தானே இதை ஏன் எதிர்க்கிறார்கள் என்று உங்களுக்கு தோன்றுகிறதா? அல்லது இது சரி தான் என்று நினைக்கிறீர்களா?

More News

    Read more about: tirumala tirupati
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+