காளி மாதா கோவில் அமைந்துள்ள தேசிய நெடுஞ்சாலை எண் 22 கல்கா நகரம் வழியாக ஓடுகிறது. காளி மாதாவிற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த பழமையான கோவில் புகழ்பெற்ற இந்து யாத்ரீக ஸ்தலமாகும். நவராத்ரி நேரத்தில் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள். இந்து யாத்ரீகர்களிடையே இக்கோவில் புகழ்பெற்று விளங்குகிறது.
மத தொடர்பு மட்டுமல்லாது புராண முக்கியத்துவம் வாய்ந்ததாக இக்கோவில் திகழ்கிறது. மகாபாரத காலத்தில் பாண்டவர்கள் தங்கள் அக்யத வாசத்தின் போது இக்கோவிலைக் கட்டியதாக கூறப்படுகிறது.
பஞ்ச்குலா பகுதியில் சிவ வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது. எனினும் சிவனோடு சக்தியையும் வழிபடுகிறார்கள். துர்கா, களிகா, சண்டி, நயினா, மானசா, ஷாரதா, அம்பிகா, காளி, பவானி போன்ற பல பெயர்களின் சக்தியை வழிபடுகிறார்கள்.
சண்டிகரில் இருந்து 14கிமீ தொலைவில் உள்ள கல்கா இமாச்சல பிரதேசத்தின் நுழைவாயிலாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் காளி கோவிலின் பெயரால் இவ்விடம் கல்கா என்றழைக்கப்படுகிறது. 103 குகைகளின் வழியாக செல்லும் ரயில் பயணம் வசதியானதாகவும், சாகசம் நிறைந்ததாகவும் இருக்கிறது.



Click it and Unblock the Notifications