Search
  • Follow NativePlanet
Share

பட்டடக்கல் - சாளுக்கியர்கள் காலத்துக்கு ஒரு பயணம்

20

பட்டடக்கல் எனும் இந்த வரலாற்று ஸ்தலத்துக்கு விஜயம் செய்யும் பயணிகள் ஒருகாலத்தில் தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற ராஜவம்சமாக விளங்கிய சாளுக்கிய ராஜவம்சத்தினரின் காலத்துக்குள் பிரவேசிக்கும் உணர்வைப்பெறலாம். பட்டடக்கல் என்றால் மாணிக்கக்கற்களின் நகரம் என்பது பொருள். சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகராக விளங்கிய இந்த நகரம் அவர்களின் மஹோன்னத ஆட்சியைக்கான சான்றாக இருப்பதாகவும் கொள்ளலாம். கர்நாடக மாநிலத்தில் பாகல்கோட் மாவட்டத்தில் மலப்பிரபா ஆற்றின் கரையில் இந்த நகரம் அமைந்துள்ளது.

 

அரசர்களின் உறைவிடமாக திகழ்ந்த ஸ்தலம்

இந்த நகரத்தில் சாளுக்கிய மன்னர்களால் 7ம் மற்றும் 8ம் நூற்றாண்டுகளில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்ட ஒன்பது முக்கியமான ஹிந்து கோயில்கள் மற்றும் ஒரு ஜைன கோயில் போன்றவற்றை கொண்டுள்ளது.

இவற்றின் உன்னதமான கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை அம்சங்களின் காரணமாக யுனெஸ்கோ அமைப்பு இந்த பட்டடக்கல் ஸ்தலத்தை உலக பாரம்பரிய ஸ்தலமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பட்டடக்கல் கோயில்கள் வட இந்திய பாணி கட்டிடக்கலை அம்சங்களுடன் தென்னிந்திய பாணியையும் சேர்ந்து உருவாக்கப்பட்டிருப்பதால் தனித்தன்மையுடன் காட்சியளிக்கின்றன. இந்த அற்புதமான கலப்பு அம்சத்தை விருபாக்‌ஷா கோயிலில் நன்றாகக் காணலாம்.

740 ம் ஆண்டு லோகமஹாதேவி அரசியால் இந்த கோயில் கட்டுவிக்கப்பட்டதாக  வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன. அவரது கணவரான இரண்டாம் விக்ரமாதித்யன் பல்லவ அரசர்களை வெற்றிகொண்டதற்கான சின்னமாக இந்த கோயிலை நிர்மாணித்ததாக அறியப்படுகிறது.

பட்டக்கல் ஸ்தலத்துக்கு அருகிலேயே மற்றொரு முக்கியமான சுற்றுலாத்தலமான ஏஹோல் 10 கி.மீ தொலைவிலும், படாமி 22 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இந்த இரண்டு நகரங்களும் கூட சாளுக்கிய சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய பெருமையை கொண்டிருப்பதுடன் ஏராளமான வரலாற்று சின்னங்கள் மற்றும் கோயில்களையும் கொண்டுள்ளன. பட்டடக்கல் ஸ்தலத்துக்கு ரயில் மற்றும் பேருந்து மூலமாக விஜயம் செய்யலாம். அருகிலுள்ள ரயில் நிலையம் படாமி ஆகும்.

பட்டடக்கல் சிறப்பு

பட்டடக்கல் வானிலை

சிறந்த காலநிலை பட்டடக்கல்

  • Jan
  • Feb
  • Mar
  • Apr
  • May
  • Jun
  • July
  • Aug
  • Sep
  • Oct
  • Nov
  • Dec

எப்படி அடைவது பட்டடக்கல்

  • சாலை வழியாக
    பல உள்ளூர் மற்றும் மாநில அரசுப்பேருந்துகள் படாமி, ஏஹோல் மற்றும் பெங்களூர் நகரங்களிலிருந்து பட்டடக்கல் ஸ்தலத்துக்கு இயக்கப்படுகின்றன. குறிப்பிட்ட கால இடைவெளிகளில் தொடர்ந்து இயக்கப்படும் இந்த பேருந்துகள் சாதாரணக்கட்டணத்தைக் கொண்டுள்ளன.
    திசைகளைத் தேட
  • ரயில் மூலம்
    படாமி ரயில் நிலையம் நகர பட்டடக்கல் பகுதியிலிருந்து 24 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது. இது இந்தியாவின் முக்கிய நகரங்களுடன் நல்ல முறையில் ரயில் சேவைகளால் இணைக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து டாக்சிகள் அல்லது உள்ளூர் பேருந்துகள் மூலம் நகருக்குள் பயணம் மேற்கொள்ளலாம்.
    திசைகளைத் தேட
  • விமானம் மூலம்
    பெல்காம் விமான நிலையம் 205 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது தவிர பெங்களூர் சர்வதேச விமான நிலையம் 448 கி.மீ தூரத்தில் இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கும் சர்வதேச நகரங்களுக்கும் விமான சேவைகளைக் கொண்டுள்ளது.
    திசைகளைத் தேட
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 Mar,Wed
Check Out
12 Mar,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 Mar,Wed
Return On
12 Mar,Thu