ரேவாரி என்ற நகரம் ஹரியானா மாநிலத்தில் உள்ள ரேவாரி மாநகராட்சியில் அமைந்துள்ளது. டெல்லியிலிருந்து 89 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளதால் தேசிய தலைநகர வட்டாரத்தில் ஒரு பகுதியாக விளங்குகிறது. இந்தியாவின் கடைசி ஹிந்து பேரரசரான ஹேமு படித்து வளர்ந்ததெல்லாம் ரேவாரியில் தான் என்று வரலாறு கூறுகிறது.
ஹவேலி என்றழைக்கப்படும் இவர் வாழ்ந்த மாளிகை இன்னமும் கூட இந்த நகரத்தில் உள்ள குதப்பூர் என்ற இடத்தில் உள்ளது. இவர் காப்பர் தகடுகள், பாத்திரங்கள் மற்றும் பித்தளை போன்ற உலோக பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு இவர் வாழ்ந்த காலத்திலேயே அடித்தளம் நாட்டினார்.
இப்போதும் கூட இவ்வூர் இந்த தொழிற்சாலைகளுக்காக புகழ் பெற்று விளங்குகிறது. ரேவாரி ஹரியானாவில் உள்ள குர்கான் மாநகராட்சியின் ஒரு பகுதியாக விளங்கியது. பின்னர் 1989 வரை மகேந்திரகர்ரின் ஒரு பகுதியாக இருந்தது. அதற்கு பின்னரே இது தனி மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது.
ரேவாரி மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்கள்
ரேவாரியிலுள்ள ரேவாரி ஹெரிடேஜ் ஸ்டீம் லோகோமோடிவ் அருங்காட்சியகம் தான் அங்குள்ள முக்கியமான ஈர்ப்பாகும். இந்த இடம் 1893-ஆம் கட்டப்பட்டதாகும்.
இந்தியாவிலேயே இந்த ஒரு அருங்காட்சியகத்தில் மட்டும் தான் பல மைல் தூரம் பயணம் செய்த சில ஸ்டீம் எஞ்சின்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன.
1990-ஆம் ஆண்டிலிருந்து இந்த ஸ்டீம் என்ஜின்களின் பயன்பாடு நிறுத்தப்பட்டதால் அவைகள் கவனிப்பாரின்றி இருந்தன. பின்னர் இரயில்வே துறை டிசம்பர் 2002-ல் இந்த இடத்தின் உரிமையை கோரி இதனை ஹெரிடேஜ் அருங்காட்சியகமாக மாற்றியது.
ரேவாரியின் வானிலை
ரேவாரியில் எப்போதும் வறந்த வானிலையே நிலவும். இங்கு கோடை, குளிர் மற்றும் பருவம் என்று மூன்று காலங்கள் நிலவும்.
ரேவாரியை அடைவது எப்படி?
ரேவாரிக்கு இந்தியாவிலுள்ள முக்கிய நகரங்களிலிருந்து விமானம், இரயில் மற்றும் சாலை வழியாகவும் வந்தடையலாம்.



Click it and Unblock the Notifications