Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » தலச்சேரி » ஈர்க்கும் இடங்கள் » வெல்லஸ்லி’ஸ் பங்களா

வெல்லஸ்லி’ஸ் பங்களா, தலச்சேரி

28

வெல்லஸ்லி’ஸ் பங்களா எனும் இந்த கம்பீரமான காலனிய காலத்து சொகுசு மாளிகை இயற்கை எழில் மற்றும் அமைதி நிறைந்த சூழலில் வீற்றிருப்பதால் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் பிரசித்தமாக அறியப்படுகிறது. முதல் வெலிங்க்டன் பிரபுவான லார்டு ஆர்தர் வெல்லஸ்லி என்பவரின் பெயரிலேயே இது அழைக்கப்படுகிறது. முதல் முதலாக கிரிக்கெட் விளையாட்டை தலசேரியில் அறிமுகப்படுத்தியவர் எனும் பெருமையை இந்த வெல்லஸ்லி பிரபு பெற்றுள்ளார்.

வெல்லெஸ்லி பிரபு மற்றும் அவரது படையினர் இந்த பங்களா மற்றும் சுற்றியுள்ள பகுதியை கிரிக்கெட் விளையாடுவதற்கு பயன்படுத்தினர் என்பதாக சொல்லப்படுகிறது.

எனவே இந்திய கிரிக்கெட் வரலாற்றின் ஒரு முக்கிய அம்சமாக இந்த பங்களா கருதப்படுவதும் குறிபிடத்தக்கது. தற்சமயம் இந்த மாளிகை சப் கலெக்டர் இருப்பிடமாக பயன்படுத்தப்படுகிறது.

தலச்சேரி கோட்டைக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த பாரம்பரிய மாளிகையை நகரின் எல்லாப்பகுதிகளிலிருந்தும் சுலபமாக சென்றடையலாம். ஜும்மா மஸ்ஜித் மற்றும் இங்கிலீஷ் சர்ச் போன்ற இதர முக்கியமான சுற்றுலா அம்சங்களும் இதற்கு அருகிலேயே அமைந்திருப்பது மற்றொரு விசேஷம். வரலாறு மற்றும் கலையம்சம் இரண்டும் கலந்து காட்சியளிக்கும் இம்மாளிகை எல்லா பருவங்களிலும் பயணிகளை ஈர்க்கும் ஒன்றாக விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
18 Aug,Tue
Check Out
19 Aug,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
18 Aug,Tue
Return On
19 Aug,Wed