Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழிநுட்ப பூங்காக்கள்!

இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழிநுட்ப பூங்காக்கள்!

இந்தியாவின் புகழ்பெற்ற தகவல் தொழிநுட்ப பூங்காக்கள்!

By

உலக அளவில் வாழ்க்கை தரம், உள்கட்டமைப்பு போன்றவற்றில் இந்திய நகரங்கள் வேகமாக வளர்ந்து வருகின்றன. இந்தியாவின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் காரணிகளாக சுற்றுலாத்துறை, தகவல் தொழிற்நுட்ப துறைகள் பார்க்கப்படுகின்றன.

அதற்கேற்றார் போலவே இந்தியாவின் முக்கிய நகரங்கள் அனைத்திலும் ஒரு தகவல் தொழிற்நுட்ப பூங்காவாவது அமைந்துள்ளன.

இந்த பூங்காக்கள் பற்பல நவீன வசதிகளுடன் அலுவலகம், குடியிருப்பு இரண்டையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை. அந்தவகையில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற தகவல் தொழிநுட்ப பூங்காக்களை பற்றி காண்போம்.

எலக்டிரானிக்ஸ் சிட்டி, பெங்களூர்

எலக்டிரானிக்ஸ் சிட்டி, பெங்களூர்

இந்தியாவின் மிகப்பெரிய மின்னணு பூங்காவாக பெங்களூரின் எலக்டிரானிக்ஸ் சிட்டி அறியப்படுகிறது. அதோடு எலக்டிரானிக்ஸ் சிட்டி பெங்களூரில் அமைந்துள்ள காரணத்தாலே பெங்களூர் மாநகரம் சிலிக்கான் வேல்லி என்று அழைக்கப்படுகிறது.

மாகர்பட்டா, புனே

மாகர்பட்டா, புனே

புனேவின் புறநகர் பகுதியில் அமைந்திருக்கும் மாகர்பட்டா சிட்டி குடியிருப்பு பகுதி, சைபர் சிட்டி, கார்ப்பரேட் கோபுரங்கள் என்று பல நவீன வசதிகளை கொண்டது. இந்தியாவில் அலுவலகத்துக்கு அருகிலேயே நவீன வசதிகளை கொண்ட குடியிருப்பு நகரத்தை உருவாக்க வேண்டும் என்ற திட்டத்தின் கீழ் முதன்முதலாக உருவாக்கப்பட்ட நகரங்களில் மாகர்பட்டாவும் ஒன்று

ஹைடெக் சிட்டி, ஹைதராபாத்

ஹைடெக் சிட்டி, ஹைதராபாத்

பெங்களூர் மாநகரம் இந்தியாவின் மிகச்சிறந்த தகவல் தொழில் நுட்பத்துறை கேந்திரமாக மாறிய பிறகு அப்போதைய ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு ஹைதராபாத் நகரத்தையும் தகவல் தொழில்நுட்பவியல் கேந்திரமாக மாற்ற விரும்பினார். எனவே அவர் இந்த ஹைடெக் சிட்டி கேந்திரத்தில் பலவித கட்டமைப்பு வசதிகளை உருவாக்கி மிகப்பெரிய தகவல்தொழில் நுட்ப நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களை அமைப்பதற்கு வகை செய்துள்ளார்.

இன்ஃபோடெக் பார்க், மும்பை

இன்ஃபோடெக் பார்க், மும்பை

தி இண்டர்நேஷனல் இன்ஃபோடெக் பார்க் நவி மும்பையின் வாஷி பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த தொழிற்நுட்ப பூங்கா அனைத்து விதமான நவீன வசதிகளையும் கொண்டிருப்பதுடன் மிகச் சிறந்த பொறியியல் படைப்பாகவும் கருதப்படுகிறது.

சைபர்வேல் ஐ.டி பார்க், சென்னை

சைபர்வேல் ஐ.டி பார்க், சென்னை

இண்டர்நேஷனல் டேக் பார்க்குக்கு பிறகு அசெண்டாஸ் நிறுவனத்தின் புகழ்பெற்ற படைப்பாக சைபர்வேல் ஐ.டி பார்க் அறியப்படுகிறது. இந்த தகவல் தொழிற்நுட்ப பூங்கா சென்னையின் தரமணி பகுதியில் அமைந்திருக்கிறது. இங்கு இந்தியாவின் மிகப்பெரிய தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் மற்றும் நிறைய மென்பொருள் நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளன.

டி.எல்.எஃப் ஐ.டி பார்க், நொய்டா

டி.எல்.எஃப் ஐ.டி பார்க், நொய்டா

உத்தரபிரதேசத்தின் நொய்டா நகரில் டி.எல்.எஃப் ஐ.டி பார்க் அமைந்திருக்கிறது. 5 பிளாக்குகளாக பிரிக்கப்பட்டுள்ள இந்த தொழிற்நுட்ப பூங்காவில் பசுமை சூழ எண்ணற்ற நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளன. மேலும் டி.எல்.எஃப் ஐ.டி பார்க் சென்னை, கொல்கத்தா, சண்டிகர், புவனேஸ்வர் போன்ற நகரங்களிலும் இருக்கின்றன.

டெல்லி ஐ.டி பார்க், டெல்லி

டெல்லி ஐ.டி பார்க், டெல்லி

டெல்லியின் சாஸ்த்ரி பார்க் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெகு அருகிலேயே டெல்லி ஐ.டி பார்க் அமைந்திருக்கிறது. அதோடு இந்த தொழிற்நுட்ப பூங்காவின் வளாகம் டெல்லி மெட்ரோ ரயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமானது.

மில்லினியம் சிட்டி ஐ.டி பார்க், கொல்கத்தா

மில்லினியம் சிட்டி ஐ.டி பார்க், கொல்கத்தா

கொல்கத்தாவின் பிதான்நகர் பகுதியில் மில்லினியம் சிட்டி ஐ.டி பார்க் அமைந்துள்ளது. சால்ட் லேக் சிட்டி என்றும் அழைக்கப்படும் இந்த தொழிற்நுட்ப பூங்காவில்தான் கொல்கத்தாவின் மிகப்பெரிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

டெக்னோபார்க், திருவனந்தபுரம்

டெக்னோபார்க், திருவனந்தபுரம்

இந்தியாவில் தகவல் தொழிற்நுட்ப நிறுவனங்களுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள தொழிற்நுட்ப பூங்காக்களில் டெக்னோபார்க் முதலாவதாகவும், மிகப்பெரிய பூங்காக்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. இங்கு சிறப்பு பொருளாதார மண்டலங்கள், டெக்னோபார்க் கிளப் மற்றும் டெக்னோபார்க் அட்வென்ச்சர் கிளப் போன்ற வசதிகள் உள்ளன.

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+