Search
  • Follow NativePlanet
Share
» »மதுகுடிக்க ஏற்ற அந்தமாதிரியான சுற்றுலாத் தலங்கள்.!

மதுகுடிக்க ஏற்ற அந்தமாதிரியான சுற்றுலாத் தலங்கள்.!

அன்றாட வாழ்வின் ஓட்டத்தில் இருந்து கொஞ்சம் ஓய்வெடுக்க உதவுவதே இந்த சுற்றுலாத் தான். வேலைப் பழு, பாஸ் டார்ச்சரில் இருந்து விலகி ஜாலியாகவும், மனதை புத்துணர்ச்சி ஏற்படுத்தவும் அவ்வப்போது நாம் செல்லும் ஒவ்வொரு சுற்றுலாவும் வாழ்நாட்களை கூட்டுகின்றன. பல பொக்கிசமான நினைவுகளையும் தருகின்றன. இதில், நண்பர்களுடன் சுற்றுலா என்றாலே மது அருந்தி மகிழ்வதுதானே. மது அருந்துவதற்காகவே ஏற்ற சுற்றுலாத் தலங்களுக்குச் செல்வதும் உண்டு. சரி அப்படி மதுகுடிக்க ஏற்ற, சுற்றுலாவையும் ரசிக்க, மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கக்கூடிய தலம் நம்ம நாட்டுல எங்க இருக்குதுன்னு தெரியுமா ?. வாங்க, அப்படிப்பட்ட மதுலோகம் குறித்து அறிந்து கொள்வோம்.

சிவபுரி பீச்

சிவபுரி பீச்

ரிஷிகேஷில் உள்ள அனைத்து வேடிக்கை மற்றும் சாகசங்கள் நிறைந்த பயணத்திற்குப் பிறகு உங்களது சோர்வைப் போக்க உண்மையில் தேவைப்படுவது ஒரு பாட்டில்தான். சாகச விளையாட்டுகளில் பங்கேற்காவிட்டாலும் சரி, சிவபுரி கடற்கரையை சுற்றியுள்ள கவர்ச்சியும், முகாம்களையும் மது அருந்தியவாரே சுற்றுப்பார்த்துவிட்டு சக கேம்பர்களுடன் கதைகள் பகிர்ந்து கொள்ளலாம்.

Maxime Guilbot

மணாலி

மணாலி

இந்தியாவில் மிகவும் பிரசிதிபெற்ற சுற்றுலாத் தலங்களில் மிக முக்கியமான பங்கு வகிப்பது மணாலி என நாம் அறிவோம். ஆனால், அங்கே மலைப் பிரதேசங்களின் நடுவே அமர்ந்து மது குடித்த அனுபவம் உங்களுக்கு உண்டா ?. நண்பர்களுடன் மதுவை பகிர்ந்து கொள்ளும் போது, அதில் கிடைக்கும் அனுபவத்தை எதுவும் வெல்ல முடியாது. பனிப்பொழிவும், பசுமையான பைன் காடுகளும், உறைய வைக்கும் காற்று, மனதைக் கொள்ளைகொள்ளும் காட்சிகள் வேறெதுக்கும் ஈடாகாது.

Pom'

நாசிக்

நாசிக்

நாசிக் நாட்டின் சிறந்த மது தலைநகரமாக உள்ளது. இங்கு மிகச் சிறந்த மது தயாரிக்கும் 30-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. மதுப்பிரியர்களைக் கவர்வதற்காகவே திராட்சை தோட்டங்களில் ஓய்வகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளது. திராட்சை தோட்டத்தின் நடுவே, கலகலவென நண்பர்களோடு உரையாடிக் கொண்டே மதுவையும் ருசிப்பது ஆனந்தம்தானே.

Sulawines1234

காசிரங்கா வனக்காடு

காசிரங்கா வனக்காடு

காசிரங்கா தேசியப் பூங்கா இயற்கை எழிலும் வளமும் கொட்டிக் கிடக்கும் வடகிழக்கு இந்திய மாநிலங்களில் பெரிய மாநிலமான அஸ்ஸாம் மாநிலத்தின் கோலாகட் மற்றும் நகாவோன் மாவட்டங்களில் அமைந்துள்ளது. இந்த தேசிய பூங்கா மற்றும் அதன் வனவிலங்கு சரணாலயத்தின் சதுப்பு நிலங்கள் அற்புதமான வனவிலங்கு சுற்றுப்பயணத்திற்கு உதவுகின்றன. அது மட்டுமல்ல, பூங்காவின் கவர்ச்சிகரமான அழகு மற்றும் பசுமை நிறைந்த காடு ஒரு பீர் வேண்டுமென்றே உங்களை கவர்ந்துவிடும்!

E. Dronkert

பாராமதி

பாராமதி

ரொட்டி, பாராமதியில் இருக்கும் நான்கு பருவகால மதுத் தொழிற்சாலைகள் சுற்றுலா பயணிகளுக்கு முழுமையான உபசரிப்பாகும். புனேவிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவில் மலையின் மேலே விருந்தினர்களை குசிப்படுத்தும் ஆங்கிலேயே பாணியில் மாளிகைப் போல கட்டமைக்கப்பட்டுள்ளது.

Deni Williams

நந்தி மலைகள்

நந்தி மலைகள்

கர்நாடகாவில் முக்கிய சுற்றுலாத் தலங்களில் ஒன்றான நந்தி மலைகளின் நடுவே அமைந்துள்ள, மது ஆலை கர்நாடகாவின் மது தொழில்துறையில் மிகவும் பிரபலமானவைகளில் ஒன்றாகும். அதனுடைய பிரெஞ்சு பாணியிலான மதுவிற்காக புகழ்பெற்ற இத்தொழிற்சாலையும், அதனைச் சுற்றியுள்ள இயற்கைக் காட்சிகளும் நீண்ட நேரம் நண்பர்களுடன் மதுவையும், மனசையும் பரிமாரிக்கொள்ள உதவுகிறது.

Sulawines1234

அக்லுஜ்

அக்லுஜ்

மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்திலுள்ள அக்லுஜ் ஃபிரேடெலீ வயின்யார்ட்ஸ்யிற்கு உரித்தான அதனுடைய பெரிய விரிவான திராட்சை தோட்டங்களுக்காக அறியப்படுகிறது. அதனுடைய இத்தாலிய பாணியிலான மதுவிற்காக நன்கு அறியப்படுகிறது, ஃபிரேடெலீ அதற்கான பெயரை உருவாக்கியுள்ளது மற்றும் பல சுற்றுலா பயணிகளின் மனதில் அதனுடைய நினைவு பொறிக்கப்பட்டுள்ளது.

Rachel Strohm

தால் ஏரி

தால் ஏரி

நீங்கள் ஒயின் விரும்பியாக இருந்தால், உங்களது வாழ்க்கையில் மிகச் சிறந்த ஏதாவது ஒன்றை இழந்துவிட்டீர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள் என்றால் ஒரு முறை காஷ்மீர் பல்லத்தாக்கில் அமைந்துள்ள தால் ஏரிக்குச் சென்று விரும்பமான ஒயினை அருந்தி வாருங்கள். சூரியன் மறையும் ஏரியின் அழகு, தளுவும் தென்றல் காற்று கண்களில் ஒரு சில நீர்த்துளிகளுடன் வாழ்வை புதுப்பிக்கும்.

Virtual Rachel

இகத்புரி

இகத்புரி

இகத்புரியில் இருக்கும் வாலோனீ வயின்யார்ட் பிரஞ்சு பாணியிலான மது தயாரிக்கும் கடையுடன் இருக்கும் மது தொழிற்சாலையாகும். இங்குள்ள வியப்பூட்டும் காட்சிகளும், மனதைக் கவரும் தலங்களும் வார இறுதி நாள் சிற்றுலாவிற்கு ஏற்ற இடமாகத் திகழ்கிறது. ஏரிக் கரையில் அமைந்துள்ள விடுதிகளும், உணவகங்களும் ஆசுவாசமாக அமர்ந்து உரையாட ஏற்றவையாக உள்ளது.

16:9clue

ராஜஸ்தான்

ராஜஸ்தான்

ஜீப் சவாரி அல்லது குதிரை சவாரி சென்று ஒரு கிராமத்தை அடைந்த பின் நீங்கள் விரும்பிய விஸ்க்கி அல்லது பீர் அருந்துவதை கற்பனை செய்து பாருங்கள்! அதுவும், ராஜஸ்தானில் நீண்டதூர மணல் பாலைவன பயணத்திற்குப் பிறகு கிம்ஷாரில் ஒரு சிறிய நீர்க்குட்டை அருகே உள்ள முகாமில் ஜில்லுன்னு ஒரு பீர்.. ஆஹா...

Qfl247

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more