» »கர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்!!

கர்நாடக கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் மைசூர் மற்றும் அதனைச் சுற்றி நாம் அவசியம் காண வேண்டிய இடங்கள்!!

Written By: Bala Karthik

அதீத கலாச்சாரத்தையும், காலனித்துவ வரலாற்றையும் கொண்டிருக்கும் மைசூரு., கலாச்சாரத்தையும், வரலாற்று நினைவு சின்னத்தையும் பிரதிபலித்து நகரம் முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது. துல்லியமாக இதனை கர்நாடகாவின் கலாச்சார தலைநகரமென அழைக்க, வுடையாரின் வரலாற்றை மிளிரும் வண்ணம், மைசூரானது நகர கலாச்சார வடிவத்தை கொண்டிருக்கிறது.

வெளியே வருபவர்களுக்கான தலைசிறந்த விடுமுறை இலக்காக இது அமைய, புகழ்மிக்க மைசூரு அரண்மனை, சாமுண்டி மலை மற்றும் பல விளையாட்டுத்தனமான உணர்வினை நாம் வார விடுமுறையில் கொள்ள ஏதுவான சூழ்நிலையையும் உருவாக்குகிறது. இருப்பினும், மைசூருவின் நாட்டுப்புறமது, இந்த நகரத்தின் புகழை இயற்கை ததும்ப ஏக்கத்துடன் உரைக்கிறது. ஆகையால், வார விடுமுறைக்கு பையை மூட்டைக்கட்ட, இந்த இலக்குகளுக்கு குறும்புத்தனமாக சாலை பயணமும் நாம் செல்ல, மைசூருவிலிருந்து 200 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் இவ்விடத்தையும் அடைந்து ஆரவாரம் கொள்ளலாம்.

 சிவானசமுத்ர வீழ்ச்சி:

சிவானசமுத்ர வீழ்ச்சி:

மைசூருவிலிருந்து 78 கிலோமீட்டர் தொலைவிலுள்ள சிவானசமுத்ரா சிறந்த காட்சிகளை கொண்ட நீர்வீழ்ச்சியாக மைசூருவின் அருகாமையில் அமைந்திருக்கிறது. காவேரி நதிக்கரையினை தழுவிக்காணப்படும் சிவானசமுத்ரா இரு அங்கமாக உருவாகி ககனச்சுக்கி மற்றும் பராச்சுக்கி வீழ்ச்சி எனவும் அழைக்கப்படுகிறது.

பருவமழைக்காலத்திலும், அல்லது பருவமழைக்காலத்தின் பின்னரும் இந்த சிகரத்தின் வீழ்ச்சியானது மிளிரும் நீரைக்கொண்டிருக்க, சிவானசமுத்ரத்திற்கு நாம் செல்வதற்கு ஏதுவாகவும் அமைந்திடக்கூடும். இதன் அருகாமையில் காணப்படும் இரங்கநாத சுவாமி ஆலயத்தையும் நாம் பார்த்திடலாம்.

PC: Tridib Bhattacharya

நாகர்ஹோல்:

நாகர்ஹோல்:

மைசூருவிலிருந்து 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் நாகர்ஹோல் தேசிய பூங்காவை நாம் அடைய 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. மேற்கு தொடர்ச்சியின் ஒரு அங்கமாக இது இருக்க, அதீத பல்லுயிரென ஓடைகளையும், நதிகளையும், மலைகளையும், மற்றும் நீர்வீழ்ச்சியையுமென காடுகள் அடர்ந்து படர்ந்து காணப்படுகிறது.

நாகர்ஹோலில் காணப்படும் சில விலங்குகளாக, நான்கு கொம்பு மான்கள், வங்காள புலிகள், இந்திய சிறுத்தை என பெயர் சொல்லும் பலவும் காணப்படுகிறது. இங்கே செல்லும்போது தொலைநோக்கி கருவியான பைனாக்குலரை நாம் எடுத்து செல்வதன் மூலம், திசையமைவு வெள்ளை நிற இபிஸ், சிவப்பு நிற தலைக்கொண்ட கழுகு என பலவற்றையும் இங்கே பார்க்க முடிகிறது.

PC: Ashwin Kamath

 கூர்க்:

கூர்க்:

இந்த கூர்க் பகுதியில், சுருள் சுருளாக காணப்படும் காபி தோட்டம் மற்றும் வாசனை திரவிய தோட்டமானது சிறந்த கால நிலையைக்கொண்டு பச்சை பசேலென காட்சி தருகிறது. மைசூருவிலிருந்து 118 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் இவ்விடத்திற்கு 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகிறது. இயற்கையை நோக்கிய அற்புதமான தப்பித்தல் பயணமாக இது அமைய, சில கண்கொள்ளா காட்சிகள் நிறைந்த இடத்தையும் கூர்க் கொண்டிருக்கிறது.

மடிக்கேரியின் அப்பே வீழ்ச்சிகளென மண்டல்பட்டி வரை நாம் செல்ல, விராஜ்பேட்டை அருகாமையில் காணப்படும் சிகரமது, சுற்றுப்புற புல்வெளிகளை கொண்டு மதிமயக்கும் அழகிய காட்சியை கண்களுக்கு தந்திட, கூர்க்கை நாம் பார்ப்பதற்கான காரணங்களுள் ஒன்றாகவும் இது அமைகிறது.

PC: Ashwin Kumar

பேளூர்:

பேளூர்:

ஆலய நகரமான பேளூர், ஹொய்சாலா பேரரசின் சிறந்த கலைகளை கொண்டு வீடாக விளங்குகிறது. பேளூருவின் சென்னக்கேசவா ஆலயம் புகழ்பெற்று விளங்க, கண்கொள்ளா காட்சியாகவும் இந்த ஆலயமானது அமைந்து பல சுற்றுலா பயணிகளையும், யாத்ரீகத் தளத்தையும் ஈர்த்து ஒவ்வொரு வருடமும் காணப்படுகிறது.

அற்புதமான கட்டிடக்கலைகளை விஷ்ணு பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டு பெயர்பெற்று விளங்குகிறது இந்த சென்னக்கேசவா ஆலயம். இந்த மாபெரும் ஆலயத்தின் வழியே நாம் நடக்க, அருகாமையில் இருக்கும் ஹலேபிடுவையும் காண்கிறோம். மைசூருவிலிருந்து 158 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் பேளூரை நாம் அடைய, 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகக்கூடும்.

PC: UDUPI

சிக்மகளூர்:

சிக்மகளூர்:


விடுமுறைக்கேற்ற மலை பகுதியான சிக்மகளூர், தலைசிறந்த பசுமையையும், மென்மையான கால நிலையையும் கொண்டு படர்ந்து விரிந்து காணப்பட, காபி தோட்ட வளர்ச்சிக்கு இவ்விடமானது சிறப்பாக அமைந்து முல்லையங்கிரி தொடர்ச்சியின் மலை அடிவாரத்திலும் வளர, இயற்கை விரும்பிகளுக்கு இன்றியமையாத இடமாக அமையவும்கூடும்.

சாகச பிரியர்களால் முல்லையங்கிரி சிகரம் ஏறப்பட, குட்ரேமுக் அல்லது பத்ரா நதியில் படகு சவாரியும் நாம் செய்யலாம். மற்றுமோர் இலக்காக கெம்மனங்குண்டியில் நாம் ஏற முயல்கிறோம். மைசூருவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் சிக்மகளூர் இருக்க, இந்த இலக்கை நாம் எட்ட 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகவும் கூடும்.

PC: Vikram Vetrivel

பெங்களூரு:

பெங்களூரு:


பெங்களூரு முதல் மைசூரு வரையிலான சாலை பயணமானது, அதீத புகழ்மிக்க பயணங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது. மைசூருவின் நாட்டுப்புறமதில் சாலை பயண திட்டத்தை நாம் திட்டமிட, அழகிய பெங்களூரு நகரத்தையும் இதன் வழியில் நாம் காணலாம்.

இவ்வழியில் மத்தூரை போன்ற சில இடங்களில் நாம் நிறுத்த, சுவைமிக்க சில மத்தூரு வடையையும் நா உறைய சாப்பிட்டு, மர பொம்மைகளுக்கு புகழ்மிக்க சன்னாப்பட்னாவையும் அடைய அல்லது நகரத்தின் புகழ்மிக்க பாறைகளை கொண்டிருக்கும் ராமநகராவிலும் நிறுத்திடலாம். மைசூருவிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு இருக்க, இந்த பயணமானது முழுமையடைய 3 முதல் 4 மணி நேரம் வரையிலும் ஆகக்கூடும்.

PC: Kiran