Search
  • Follow NativePlanet
Share
» »வேற்று கிரகத்திற்கு சென்று திரும்பியது போன்ற உணர்வை தரும் 7 இந்திய நகரங்கள்

வேற்று கிரகத்திற்கு சென்று திரும்பியது போன்ற உணர்வை தரும் 7 இந்திய நகரங்கள்

இந்தியாவில் கலாசாரங்கள், மதங்கள், மொழிகள், நிலப்பரப்புகள் மற்றும் வரலாறுகள் போன்ற பல்வேறு அம்சங்கள் இருப்பதை தான் கேள்வி பட்டிருப்பீர்கள். ஆனால் சூழலே மொத்தமாக மாறி போய், வேற்று கிரகத்திற்கு வந்து விட்டோமோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவிற்கு வித்தியாசமான சுற்றுசூழல் கொண்ட 7 ரகசிய இடங்கள் இந்தியாவின் எங்குள்ளது தெரியுமா? இதை படிச்சு தெரிந்து கொள்ளுங்கள்.

Island

அகட்டி தீவு

அகட்டி தீவு, லட்ச தீவுகளில் உள்ள மிக அழகான லகூன் ஏரி ஆகும். இங்கு அழகிய கடற்கரைகள் மற்றும் படிகம் போன்ற தெளிவான கடற்பரப்பை காணலாம். இங்கு ஸ்கூபா டைவிங், விண்ட் சர்ஃபிங், ஸ்நோர்களிங், வாட்டர் ஸ்கீயிங், படகு மற்றும் இரவு நேர கடல் பயணம் போன்ற சாகச விளையாட்டுகள் உள்ளன.

லோக்டாக் ஏரி

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள ஒரு நன்னீர் ஏரி ஆகும். பும்டிஸ் எனப்படும் மிதக்கும் தீவுகளில் பம்சாங்ஸ் எனப்படும் மிதக்கும் குடிசைகளில் வாழும் மீனவர்கள் என இந்த ஏரி தனித்துவமாக விளங்குகிறது. மேலும் உலகின் ஒரே மிதக்கும் தேசிய பூங்காவான கெய்புல் லம்ஜாவ் என்ற தேசிய பூங்கா லோக்டாக் ஏரியில் அமைந்துள்ளது.

பாரன் தீவு

அந்தமான் தீவுகளில் அமைந்துள்ள ஒரு எரிமலையாகும். இந்த தீவு தெளிவான கடல் நீர் மற்றும் பவள பாறைகளால் சூழப்பட்டுள்ளது. முற்றிலுமாக மாறுபட்டு, வேறு கிரகத்திற்கு வந்து விட்டது போன்ற அனுபவத்தை ஏற்படுத்தும் இடமாகும்.

Spiti

ஸ்பிட்டி பள்ளத்தாக்கு

இமாச்சல பிரதேசத்தில் உள்ள இமயமலையின் உயரமான பகுதி இது. இந்தியாவிற்கும் திபெத்திற்கும் இடையே உள்ள நிலப்பரப்பு ஆகும். இங்கு வேற்று கிரகவாசிகளின் உலகத்தை ஒத்த பழங்கால மடாலயங்களை காணலாம்.

லடாக் காந்த மலை

லடாக்கின் லே மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த மலைப்பகுதியில் கார்கள் கீழ்நோக்கி செல்லும் போது புவியீர்ப்பு விசையை மீறி மேல் நோக்கி செல்வது போல் தோன்றும் அனுபவத்தை பெறலாம்.

Dhanushkodi

தனுஷ்கோடி

தமிழ்நாட்டின் தென்கிழக்கு முனையில் அமைந்துள்ள நகரம். புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் பரந்த மணல் பரப்புகள் பிந்தைய அபோகலிப்டிக் உலக்தை நினைவூட்டும் வகையில் அமைந்துள்ளது. ஆள் நடமாட்டம் இல்லாத மணல் பரப்புகள், இடிந்த கட்டிடங்கள், சிதைந்த கட்டிடங்களை கொண்ட ஊர் என முற்றிலும் மாறுபட்ட படபடப்பான சூழலை கொண்டதாகும்.

லோனர் கிரேட்டர் லேக்

மகாராஷ்டிரா மாநிலத்தில் புல்தானா மாவட்டத்தில் உள்ள லோனார் என்ற இடத்தில் விண்கல்லால் உருவான இந்த ஏரியின் நீர், உப்பு மற்றும் கார தன்மை கொண்ட தனித்துவமானதாகும்.

வித்தியாசமான உணர்வை பெற வேண்டும், த்ரில்லிங் அனுபவம் வேண்டும் என்பவர்கள் இது போன்ற இடங்களுக்கு ஒரு முறையாவது சென்று விட்டு வரலாம்.

More News

    Read more about: spiti dhanushkodi
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+