Search
  • Follow NativePlanet
Share
» »அம்மாடியோவ்! இந்த ஊர்ல மட்டும் இத்தனை பாம்புகளா?

அம்மாடியோவ்! இந்த ஊர்ல மட்டும் இத்தனை பாம்புகளா?

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

By Staff

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள அகும்பே, தலைநகர் பெங்களூரிலிருந்து 357 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

ஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான்ஒட்டகத்திற்கான அழகிப் போட்டிகள்... குதூகலப்படுத்தும் ராஜஸ்தான்

அழகும், அமைதியும் ஒருங்கே சூழப்பெற்ற அகும்பேதான் தென் இந்தியாவிலேயே அதிகமாக மழை பெய்யும் இடமாகும். அதோடு அகும்பேவின் காடுகள் ராஜநாகத்துக்கும், பல்வேறு கொடிய பாம்புகளுக்கும் வாழ்விடமாக இருந்து வருகிறது.
அகும்பேவின் அமைதிக்காகவும், இங்குள்ள அழகிய அருவிகளை காணவும் சுற்றுலாப் பயணிகள் பல்வேறு இடங்களிலிருந்தும் திரள் திரளாக வந்து செல்கின்றனர்.

மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்!மதக்கலவரம்...144 தடை... ராம ரதயாத்திரையின் அடுத்தடுத்த அதிரடி திட்டங்கள் இவைதான்!

அகும்பேவின் அருகாமை ரயில் நிலையமாக 54 கி.மீ தொலைவில் உள்ள உடுப்பி ரயில் நிலையம் அறியப்படுகிறது. எனவே சுற்றுலாப் பயணிகள் உடுப்பி ஹோட்டல்களில் தங்கிக்கொள்வது சிறப்பானது.

      ராஜநாகங்களின் தலைநகரம்

      ராஜநாகங்களின் தலைநகரம்

      அகும்பேவின் காடுகளில் அதிக அளவில் ராஜநாகங்கள் வசித்து வருவதால் இது ராஜநாகங்களின் தலைநகரம் என்று அறியப்படுகிறது.

        படம் : Kalyanvarma

        அகும்பெவின் சுற்றுலாத் தலங்கள்

        அகும்பெவின் சுற்றுலாத் தலங்கள்

        அகும்பெவின் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களாக ஓநேக் அபி அருவி, பர்கானா மற்றும் குஞ்சிகள் அருவி, ஜோகிகுண்டி, கூட்லு தீர்த்த அருவி ஆகியவை அறியப்படுகின்றன.

          படம் : Mylittlefinger

          அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்

          அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்

          அகும்பேவில் உள்ள 'அகும்பே மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையம்' தான் இந்தியாவிலுள்ள மழைக் காடுகள் ஆராய்ச்சி நிலையங்கிளிலேயே நிரந்தரமானது ஆகும். இங்கு பலவகைப்பட்ட தாவரங்களும், விலங்குகளும் உள்ளன. அதோடு இங்கு மருத்துவ மூலிகைகள் பாதுகாக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வருகின்றன.

          படம் : Jeff Peterson

          குளோஸ்-அப்!

          குளோஸ்-அப்!

          ராஜநாகத்தின் குளோஸ் அப் ஷாட் ஒன்றே ஆளை குளோஸ் செய்துவிடும் போலவே?!

          படம் : Showkath

          கூட்லு தீர்த்த அருவி

          கூட்லு தீர்த்த அருவி

          126 அடி உயரத்திலிருந்து விழும் கூட்லு தீர்த்த அருவி, சீதா நதியின் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த அருவியை நடைபயணம் மூலமாக அடைவதற்கு பயணிகள் 3 முதல் 4 கிலோமீட்டர் தூரத்தை கடந்தாக வேண்டும்.

          படம் : Balajirakonda

          வைப்பர்

          வைப்பர்

          அகும்பே காடுகளில் காணப்படும் வைப்பர் பாம்பு.

          படம் : Shaunak Modi

          ஓநேக் அபி அருவி

          ஓநேக் அபி அருவி

          அகும்பேவிலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஓநேக் அபி அருவி சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. இதன் உச்சிப் பகுதிக்கு செல்வதற்கு வசதியாக படிகள் இருப்பதால் பயணிகள் எந்த சிரமமுமின்றி அருவியின் உச்சியை அடையலாம்.

          குரங்கு

          குரங்கு

          அகும்பே காடுகளில் காணப்படும் குரங்கு.

          படம் : Karunakar Rayker

          தங்க நிறத் தவளை

          தங்க நிறத் தவளை

          கோல்டன் ஃபிராக் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் இந்த தங்க நிறத் தவளை அகும்பே காடுகளில் அதிக அளவில் காணப்படும்.

          படம் : Sandeep Somasekharan

          அட்டைகள் அதிகம்

          அட்டைகள் அதிகம்

          அகும்பே காடுகளில் அட்டைகள் அதிகம். எனவே கவனமாக இருங்கள்.

          படம் : Harsha K R

          இராட்சஸ சிலந்தி

          இராட்சஸ சிலந்தி

          அகும்பே காடுகளில் காணப்படும் இராட்சஸ சிலந்தி.

          படம் : Shaunak Modi

          ஆபத்தான வளைவுகள்

          ஆபத்தான வளைவுகள்

          அகும்பே செல்லும் வழியில் ஆபத்தான வளைவுகள் இருக்கும் என்பதால் கவனமாக வாகனங்களை செலுத்த வேண்டும்.

          படம் : Harsha K R

          கொண்டை ஊசி வளைவுகள்

          கொண்டை ஊசி வளைவுகள்

          கொண்டை ஊசி வளைவுகளிலும் கவனமாக வாகனங்களை செலுத்துவது முக்கியம்.

          படம் : Harsha K R

          மணிப்பாலிலிருந்து....

          மணிப்பாலிலிருந்து....

          உடுப்பி அருகே உள்ள மணிப்பாலிலிருந்து அகும்பே செல்லும் வழி.

          படம் : Binny V A

          அகும்பே சிகரம்

          அகும்பே சிகரம்

          தூரத்தில் தெரியும் அகும்பே சிகரம்.

          படம் : Harsha K R

          மழைக்காடுகள் செல்லும் வழி

          மழைக்காடுகள் செல்லும் வழி

          அகும்பேவின் மழைக்காடுகள் செல்லும் வழி.

          படம் : Harsha K R

          அடர்வனம்

          அடர்வனம்

          அகும்பே காடுகளின் தோற்றம்.

          படம் : Jeff Peterson

          சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்

          சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயம்

          அகும்பேவுக்கு அருகில் உள்ள சொமேஷ்வர் வனவிலங்கு சரணாலயதில் எடுக்கப்பட்ட கழுகு ஒன்றின் புகைப்படம்.

          படம் : Karunakar Rayker

          மழைக்காடுகள்

          மழைக்காடுகள்

          மழைக்காடுகளில் குரங்கு ஒன்று மரத்தில் தொங்கும் காட்சி.

          படம் : Abhinav

          சூரிய அஸ்த்தமனம்

          சூரிய அஸ்த்தமனம்

          அகும்பேவின் காடுகளிலிருந்து சூரிய அஸ்த்தமனத்தை ரசிப்பது அற்புதமான அனுபவம்.

          படம் : Magiceye

          அகும்பேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

          அகும்பேவை எப்போது மற்றும் எப்படி அடைவது?

          எப்படி அடைவது?

          எப்போது பயணிக்கலாம்?

          படம் : francis crawley

      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X