» »அவலபெட்டா மலைத்தொடர்

அவலபெட்டா மலைத்தொடர்

Written By: Staff

நந்தி மலை, பெங்களூருக்கு அருகில் இருக்கும் சிக்கபள்ளாபூர் மாவட்டத்திலுள்ள ஒரு மலை. கடந்த பத்து வருடங்களாக, இந்த இடம் அதிகம் கவனம் பெற்று, சனி, ஞாயிறுகளில் சுற்றுலாவிற்கு ஏற்ற இடமாய் விளங்குகிறது. இது போல் அழகான இயற்கை சார்ந்த மலையை ஆனால் ஜன நெரிசல் இல்லாத இடம் வேண்டுமா ? அப்படியானால் வாருங்கள் அவலபெட்டாவிற்கு. நந்தி மலைக்குப் பக்கத்திலேயே ஒரு அழகான மலையுச்சி அதிக கவனம் பெறாமல் இருக்கிறது. அதன் பெயர்தான் அவலபெட்டா மலைமுகடு.

நந்தி மலையைப் போன்று கூட்டம் கிடையாது; அதனால் குப்பைகள் கிடையாது; பெங்களூரில் இருந்து இரண்டு மணி நேரப் பயணம்தான். இந்த மலையுச்சியிலிருந்து பார்க்கும் காட்சிகள் : பசுமை பொங்கும் மரங்கள், சிறு ஏரிகள், மலையடிவாரத்தில் பாம்பு போல் நெளிந்து செல்லும் சாலைகள் என இயற்கை பொங்கும் மலை இந்த அவலபெட்டா!!

NH -7 - நெடுஞ்சாலை - யலஹங்கா - தேவனஹள்ளி

NH -7 - நெடுஞ்சாலை - யலஹங்கா - தேவனஹள்ளி

Photo Courtesy : Akshatha Vinayak

வழியெங்கும் மலைத் தொடர்கள்

வழியெங்கும் மலைத் தொடர்கள்

Photo Courtesy : Akshatha Vinayak

ரம்மியமான சாலைப் பயணம்

ரம்மியமான சாலைப் பயணம்

பெரேசந்த்ராவிலிருந்து பிரிந்தவுடன், அழகிய சிக்கபள்ளாபூர் உங்களை வரவேற்கத் தயாராகிறது. சாலையின் இருப்பக்கமும் திராட்சை கொடிகளும், மரங்களும் பயணத்திற்கு பெரும் உற்சாகத்தைக் கொடுக்கும்

Photo Courtesy : Akshatha Vinayak

மலைக்குச் செல்லும் வாசல்

மலைக்குச் செல்லும் வாசல்

Photo Courtesy : Akshatha Vinayak

படியேறத் தயாராகுங்கள்

படியேறத் தயாராகுங்கள்

Photo Courtesy : Akshatha Vinayak

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில்

Photo Courtesy : Akshatha Vinayak

மலையின் உச்சியில் இருக்கும் நீரூற்று

மலையின் உச்சியில் இருக்கும் நீரூற்று

Photo Courtesy : Akshatha Vinayak

மலையுச்சி

மலையுச்சி

Photo Courtesy : Akshatha Vinayak

அவலபெட்டா பெயர்ப்பலகை

அவலபெட்டா பெயர்ப்பலகை

Photo Courtesy : Akshatha Vinayak

குரங்குகள் தொல்லை அதிகம், ஆகையால் க‌டைகளின் அருகே சாப்பிடுங்கள்.

குரங்குகள் தொல்லை அதிகம், ஆகையால் க‌டைகளின் அருகே சாப்பிடுங்கள்.

Photo Courtesy : Akshatha Vinayak

அவலபெட்டாவிற்குச் செல்வது எப்படி.

பெல்லாரி சாலையில் சென்று சிக்கபள்ளாபூர் அடையுங்கள். இங்கிருந்து 14 கி.மீஇல் இடப்பக்க சாலை ஒன்று வரும். அதில் போனால் மண்டிக்கல் ஊரை அடையலாம். அங்கிருந்து மலையுச்சி 11 கி.மீ