Search
  • Follow NativePlanet
Share
» » பெங்களூர் - மைசூர் - கோவை - கொடைக்கானல் : இப்படி ஒரு சுற்றுலா கேள்விபட்டிருக்கீங்களா? #புதியபாதை 8

பெங்களூர் - மைசூர் - கோவை - கொடைக்கானல் : இப்படி ஒரு சுற்றுலா கேள்விபட்டிருக்கீங்களா? #புதியபாதை 8

பெங்களூர் - மைசூர் - கோவை - கொடைக்கானல் : இப்படி ஒரு சுற்றுலா கேள்விபட்டிருக்கீங்களா? #புதியபாதை 8

பெங்களூர், மைசூர் ஆகிய கர்நாடகப் பகுதிகளையும், கோயம்புத்தூர், கொடைக்கானல் ஆகிய தமிழக பகுதிகளையும் மூன்று நாள் முழுக்க சுற்றலாம் வாருங்கள். இது ஒரு பயண வழிகாட்டி. உங்கள் வசதிக் கேற்ப பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

ரயில் பேருந்து சுயவாகனம் ஆகியவை மூலமாக பயணிப்பது குறித்து இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது. எனினும் சுயவாகனத்தில் பயணிப்பவர்கள் அதிக இடங்களைச் சுற்றிப் பார்க்கமுடியும். பேருந்தில் பயணிப்பவர்கள் நேரத்தை சற்று தளர்த்தி அதற்கேற்ப திட்டமிட்டுக்கொள்ளலாம். ஆனால் ரயிலில் பயணிப்பவர்கள் நிச்சயம் நேரம் தவறாமையுடன் செயல்படவேண்டும்.

முதலில் பெங்களூரில் காணவேண்டிய இடங்கள் பற்றியும், அங்கிருந்து மைசூர் செல்வது எப்படி என்பது பற்றியும் காண்போம். தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

பெங்களூரில் என்னெல்லாம் இருக்கு?

 பூங்காக்கள் :

பூங்காக்கள் :

பெங்களூரு மாநகரத்தில் அதிகம் காணவேண்டிய இடங்களில் பூங்காக்கள் நிச்சயம் இடம் பெறும்.

லால் பாக் அனைவரும் காண வேண்டிய ஒன்றாகும்,

கப்பன் பார்க் எனும் பூங்காவும் அநேக சுற்றுலா பயணிகள் விரும்பி வருகை தரும் இடமாகும்.

லும்பினி கார்டன்ஸ் எனும் பூங்கா ஒரு ஏரிக்கரை. இது நாகவரா ஏரியின் கரையில் அமைந்துள்ளது. .

Purshi

கேளிக்கை

கேளிக்கை


ஒண்டர் லா எனும் அதி நவீன கேளிக்கைப் பூங்கா ஒன்று பெங்களூருவில் அமைந்துள்ளது. நீங்கள் நிச்சயம் செல்லவேண்டிய பகுதி. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பல விளையாட்டுகள் இருக்கின்றன.

ஏரிகள்

ஹெசரகட்டா எனும் ஏரி மிகவும் பிரபலமானது. சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வரும் இடமாகும்.

உல்சூர் ஏரி எனும் பகுதியில் சின்ன சின்ன தீவுகள் நிறைய இருக்கின்றன. மக்கள் இதனை பெரிதும் விரும்புகின்றனர்.

Jaseem Hamza

ஷாப்பிங்

ஷாப்பிங்


கே ஆர் மார்க்கெட் மற்றும் எம் ஜி ரோடு போன்றவை இங்கு அதிகம் மக்கள் செல்லும் ஷாப்பிங்க் தளங்கள் ஆகும். இதுதவிர பர்மா பஜார் , நேசனல் மார்க்கெட் எனும் சிறு சிறு பகுதிகள் குறைந்த விலை ஷாப்பிங் செய்ய ஏற்ற இடங்களாக இருக்கின்றன.

மால்கள்

இவ் பி, மந்திரி ஸ்கொயர், டிரோட்டல் மால், ஓரியன் மால், பீனிக்ஸ் மால், போரம் மற்றும் கருடா மால் ஆகியன பெங்களூரு நகரத்தைச் சுற்றியுள்ள அழகிய மால்கள். இங்கு ஷாப்பிங்க்காகவும், பலர் பொழுதுபோக்குக்காவும் வருகை தருகின்றனர்.

Saad Faruque

பெங்களூரு - மைசூரு (சாலை வழி பயணம்)

பெங்களூரு - மைசூரு (சாலை வழி பயணம்)

பெங்களூரு - மைசூரு தொலைவு : 150 கிமீ

பெங்களூருவிலிருந்து மைசூரு அடைய எடுத்துக் கொள்ளும் நேரம் : 3 மணி நேரம்

சில சமயங்களில் போக்கு வரத்து நெரிசல் உங்கள் பயணத்தை 4 மணி நேரமாக அதிகப்படுத்தலாம்.

Universalashic

 பெங்களூரு - மைசூரு (ரயில் வழி பயணம்)

பெங்களூரு - மைசூரு (ரயில் வழி பயணம்)

அதிகாலை 00 : 15 மணியிலிருந்து இரவு 11.59 வரை கிட்டத்தட்ட 30 ரயில்கள் பெங்களூருவிலிருந்து மைசூருக்கு செல்கின்றன.

வாரணாசி, ரேணிகுண்டா, ஹௌரா, அஜ்மீர், காவேரி, சென்னை, ஹம்பி, தூத்துக்குடி, திருப்பதி, பெங்களூரு, மால்குடி, திப்பு, சாமுண்டி, பாகமதி உள்ளிட்ட 30 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

மைசூரில் அப்படி என்னதான் இருக்கு?

 அரண்மனைகள்

அரண்மனைகள்

மைசூரு என்றாலே நம் நினைவுக்கு வருவது மைசூர் பேலஸ். மைசூர் மகாராஜா அரண்மனைதான் நாம் காணவேண்டிய முதன்மை மற்றும் முக்கிய இடமாகும்.

ஜகன்மோகன் அரண்மனை - மைசூர் அரண்மனைக்கு வருபவர்கள் நிச்சயம் இந்த அரண்மனையையும் கண்டு செல்கின்றனர்.

Nikitagupta1910

அருங்காட்சியகங்கள்

அருங்காட்சியகங்கள்


இங்கு நாட்டார் கலை அருங்காட்சியகம், ரீஜினல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி, வாக்ஸ் மியூசியம், ரயில் மியூசியம் என நான்கு அருங்காட்சியகங்கள் இருக்கின்றன.

மெழுகு சிலைகள் வடித்து வைக்கும் வேக்ஸ் மியூசியம் எனும் மெழுகு சிலை அருங்காட்சியகம் அதிக அளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது.

அதற்கு அடுத்தபடியாக ரயில் அருங்காட்சியகமும், மற்ற அருங்காட்சியகங்களும் சுற்றுலாப் பயணிகளை கவர்கின்றன.

Ezhuttukari

 பூங்காக்கள்

பூங்காக்கள்

ஹேப்பி மேன் பார்க், பிருந்தாவன் கார்டன், கரஞ்சி லேக் என்பன மைசூரில் நாம் கண்டிப்பாக காணவேண்டிய இடங்களாகும்.

Abgpt

மைசூரு - கோயம்புத்தூர்

மைசூரு - கோயம்புத்தூர்

மைசூரிலிருந்து கோயம்புத்தூர் 196 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதன் மொத்த பயண நேரம் 5 மணி நேரம் ஆகும்.

நஞ்சங்காடு, சாம்ராஜ்நகர், தளவாடி, ஹாசனூர், சத்தியமங்கலம் வழியாக கோயம்புத்தூரை எளிதில் அடையலாம். எனினும் இந்த பாதையில் மிகவும் கவனத்துடன் பயணிக்கவேண்டும். தனிமை பயணம் அறிவுரைக்கத்தக்கது அல்ல.

 கோயம்புத்தூரில் என்னென்ன இருக்கு

கோயம்புத்தூரில் என்னென்ன இருக்கு

குதூகலித்து மகிழ, கேளிக்கை பூங்கா ஒன்று இருக்கிறது. பிளாக் தண்டர் தீம் பார்க் மேட்டுப்பாளையம்.

குருந்த மலையில் இருக்கும் வேலாயுத சாமி குழந்தை உருவத்தில் அருள் தருகிறார். மேலும் இங்கு இருக்கும் மருத மலைக் கோவில் உலகப் பிரபலமாகும். அடுத்ததாக வெள்ளயங்கிரியில் இருக்கும் சிவன் கோவிலும் மக்கள் அதிகம் செல்லும் இடம்

புரூக் பீல்ட்ஸ் மால் சமீப காலமாக கோயம்புத்தூரின் இளைஞர்கள் மனதில் அதிக இடம்பிடித்த இடமாகும். மக்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர்.

கோவைக் குற்றாலம், அழகிய நீர்வீழ்ச்சியுடன் கூடிய இயற்கை சுற்றுலாத் தளம்.

சிங்காநல்லூர் ஏரியும் காணவேண்டிய முக்கிய இடமாகும்.

Jay Sands

கோயம்புத்தூர் - கொடைக்கானல் (சாலை வழி)

கோயம்புத்தூர் - கொடைக்கானல் (சாலை வழி)

கோயம்புத்தூரிலிருந்து உடுமலைப்பேட்டை, பழனி வழியாக கொடைக்கானலை 4.30 முதல் 5 மணி நேர பயணத்தில் அடையமுடியும்.

இதன் மொத்த தொலைவு - 173 கிமீ ஆகும்.

கொடைக்கானலில் என்ன செய்யலாம்

கொடைக்கானலில் என்ன செய்யலாம்

கொடைக்கானல் ஏரி மற்றும் பேரிஜம் ஏரி ஆகிய இரு ஏரிகளின் அழகை ரசிக்கலாம்

கோக்கர்ஸ் வாக்கில் நின்று நடமாடி, அமர்ந்து சில புகைப்படங்களை எடுக்கலாம்.

தேவையென்றால் குறிஞ்சி ஆண்டவர் கோவிலுக்கு சென்று அருள் பெறலாம்.

பைசன் வெல்ஸ் எனும் அழகிய இடம் மிகவும் தனிமையை விரும்புபவர்களுக்கு பிடித்த இடமாகும்.

தற்கொலை முனை எனும் பகுதி அதிக சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் இடமாகும்.

பிரயண்ட் பூங்காவுக்கும், பியர் ஷோலா நீர்வீழ்ச்சிக்கும் மக்கள் கூட்டம் வந்துகொண்டே இருக்கும்.

தூண்பாறை எனும் இடம் அழகின் மொத்த உருவத்தையும் படைத்தது போல காட்சிதரும்.

Präðéèp Jackson

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X