Search
  • Follow NativePlanet
Share
» »ஒட்டுமொத்த தீவும் பறவைகள் சரணாலயம் தான்..! எங்கன்னு தெரியுமா ?

ஒட்டுமொத்த தீவும் பறவைகள் சரணாலயம் தான்..! எங்கன்னு தெரியுமா ?

சில்கா ஏரியில் சிறிய தீவுகள் பல உள்ளன. பல்வேறு அம்சங்களுடன் அமைந்துள்ள இத்தீவுகளுக்கு நிச்சயம் வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் பயணம் செய்ய வேண்டும்.

கட்டிடக்கலை மற்றும் கோயிற்கலை அம்சங்களுக்காக மட்டுமன்றி இதர சிறப்பம்சங்களுக்கும் இந்த ஒடிசா மாநிலம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஓடிஸா மாநிலத்தில் அமைந்திருக்கும் சில்கா ஏரி ஆசியாவிலேயே மிகப்பெரிய நல்ல நீரும், கடல் நீரும் கலந்த ஏரியாகும். குளிர் காலத்தில் இந்தியாவில் நாடு விட்டு நாடு புலம்பெயர்ந்து வரும் பறவைகள் அதிகமாக வரும் இடமாக இது இருக்கிறது. இயற்கை விரும்பிகளுக்கு ஏற்ற சுற்றுலாத்தலமான இங்கு மேலும் என்னவெல்லாம் இருக்கின்றன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

சில்கா ஏரி

சில்கா ஏரி


ஒடிசாவில் சுமார் 1,100 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் தயா நதியின் வாயிலில் அமைந்துள்ளது இந்த சில்கா ஏரி. இது உப்பு நீர் ஏரி நன்செய்நிலமாக வகைபடுத்தப்பட்டுள்ளது. மேலும், வரலாற்று காலத்தில் இருந்தே இந்த ஏரி முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகவே இருந்து வந்திருக்கிறது. கலிங்க அரசன் காரவேலன் காலத்தில் கிரேக்கம், ரோம் போன்ற நாடுகளுடன் வணிகம் செய்கையில் இது முக்கிய துறைமுகமாக திகழ்ந்திருக்கிறது.

Sagarchatterjee

தீவுகளின் ஏரி

தீவுகளின் ஏரி


சில்கா ஏரியில் சிறிய தீவுகள் பல உள்ளன. பல்வேறு அம்சங்களுடன் அமைந்துள்ள இத்தீவுகளுக்கு நிச்சயம் வாழ்நாளில் ஒருமுறையாவது நீங்கள் பயணம் செய்ய வேண்டும். இத்தீவுகள் அனைத்தும் பறவைகள் தீவு, தேனிலவு தீவு, பரிகுத் தீவு, ப்ரேக்பாஸ்ட் தீவு, மலுத் தீவு, நிர்மல்ஜரா தீவு மற்றும் நலபானா என வகைப்படுத்தப்பட்டுள்ளன.

Pmsarangi

புன்னியத் தீவு

புன்னியத் தீவு


சில்காரா ஏரியில் உள்ள தீவுகளில் ஒன்றுதான் காளிஜெய் தீவு. இங்கே காளிஜெய் தேவிக்காக கோவில் ஒன்று உள்ளது. இதனால், இங்கே ஆன்மீகச் சுற்றுலா வருவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே இருக்கும். மகர சங்கராந்தி திருவிழா இந்த கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்.

Aruni Nayak

படகு சவாரி

படகு சவாரி


இந்த ஏரி கடலில் சங்கமிக்கும் இடத்தில் ரிஜ்ஹன்சா ஏரி உள்ளது. இந்த தீவில் இருந்து கடற்கரையின் அகலப் பரப்பு காட்சியை கண்டுகளிக்கலாம். சில்காவின் அழகை கண்டு களிக்க சட்படா, பளுகோன், ரம்பா மற்றும் பர்குல்லில் இருந்து படகு சவாரியில் ஈடுபட வேண்டும்.

Ckpcb

வளமிக்க இயற்கை

வளமிக்க இயற்கை


இந்த ஏரியின் தனித்துவமான நீர் அமைப்பினால் பல்வேறு கடல் தாவரங்கள், மீன்கள் போன்றவை இங்கே செழிப்பாக வளர்கின்றன. ஓடிஸாவில் அதிக மீன்வளம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகவும் இந்த ஏரி திகழ்கிறது. பத்து லட்சத்திற்கும் மேற்ப்பட்ட பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து செல்கின்றன.

Arpitargal1996

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்


இந்த ஏரியில் அமைந்திருக்கும் நலபன் தீவு தான் இங்கிருக்கும் மிக முக்கிய சுற்றுலாத்தளம் ஆகும். இந்த தீவு மொத்தமும் பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது. வருடத்தின் எந்த காலகட்டத்தில் இங்கு வந்தாலும் ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட பறவைகளை கண்டு ரசிக்க முடியும்.

J.M.Garg

அரிய வகை டால்பின்கள்

அரிய வகை டால்பின்கள்


அரிய வகை இரவாடி டால்பின்கள் சில்கா ஏரியின் சிறப்பம்சம் ஆகும். மிகவும் அருகி வரும் இவ்வகை டால்பின்களை இந்தியாவில் இந்த ஏரியில் மட்டுமே நாம் காண முடியும். இந்த ஏரியில் இருக்கும் சட்பதா என்னும் சிறு தீவுக்கு பக்கத்தில் இந்த டால்பின்களை அதிகமாக பார்க்கலாம். சில சமயம் இந்த ஏரியினுள் நாம் படகில் செல்கையில் படகுக்கு போட்டியாக டால்பின்கள் குதித்து குதித்து நீந்தி வருவது கண்கொள்ளாக்காட்சியாக இருக்கும்.

Keith Mullin

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?


சென்னை, கொல்கத்தாவில் இருந்து NH5 தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த ஏரியை சாலை மூலமாக அடையலாம். சில்கா ஏரிக்கு அருகில் 100 கிலோ மீட்டர் தொலைவில் புபனேஸ்வர் விமான நிலையம் உள்ளது.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X